ருத்ர தாண்டவமாடிய சொர்ணா! உலகக்கிண்ணத்தில் வரலாற்று சாதனை..தடுமாறிய தென்னாப்பிரிக்கா
தென் ஆப்பிரிக்க மகளிர் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் வங்காளதேசம் 232 ஓட்டங்கள் எடுத்தது.
ஷர்மின் அக்தர் அரைசதம்
மகளிர் உலகக்கிண்ணத்தின் இன்றைய போட்டியில் வங்காளதேசம் மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் விளையாடி வருகின்றன.
முதலில் துடுப்பாடிய வங்காளதேசம் 50 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 232 ஓட்டங்கள் எடுத்துள்ளது. ஷர்மின் அக்தர் 77 பந்துகளில் 6 பவுண்டரிகளுடன் 50 ஓட்டங்கள் எடுத்தார்.
சொர்ணா அக்தர் வரலாற்று சாதனை
கடைசி கட்டத்தில் ருத்ர தாண்டவம் ஆடிய சொர்ணா அக்தர் (Shorna Akter) 35 பந்துகளில் 3 சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 51 ஓட்டங்கள் விளாசினார்.
இதன்மூலம் வங்காளதேச அணிக்காக அதிவேகமாக அரைசதம் விளாசிய வீராங்கனை என்ற வரலாற்று சாதனையை அவர் படைத்தார்.
வங்காளதேச அணி கடைசி கட்டத்தில் அதிரடியாக 50 ஓட்டங்களுக்கு மேல் குவித்ததால், தென் ஆப்பிரிக்க பந்துவீச்சாளர்கள் திணறினர் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |