இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவை சுட்டுக்கொல்ல வேண்டும்: காங்கிரஸ் எம்.பி சர்ச்சை பேச்சு
இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவை விசாரணையின்றி சுட்டுக்கொல்ல வேண்டிய நேரம் இது தான் என்று கேரள காங்கிரஸ் எம்.பி ராஜ்மோகன் உன்னிதன் சர்ச்சையாக பேசியுள்ளார்.
இஸ்ரேல் போர்
கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக பாலஸ்தீனத்தின் காஸா பகுதியில் இஸ்ரேல் போர் நடத்தி வருகிறது. ஹமாஸ் தாக்குதலுக்கு திருப்பி கொடுப்பதாக நினைத்து நடைபெற்று வரும் போரில் இதுவரை 12,000 பாலஸ்தீன மக்கள் உயிரிழந்துள்ளனர்.
எந்த நாடுகள் கூறினாலும், ஐ.நாவின் போர் நிறுத்த கோரிக்கைகளையும் கேட்காமல் பாலஸ்தீனத்தில் இஸ்ரேல் போர் தொடுத்து வருகிறது. ஹமாஸ் படையினரை முழுவதுமாக ஒழிக்கும் வரை போர் நடைபெறும் என இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு அறிவித்திருந்தார்.
இந்த போரினால் அப்பாவி மக்கள் கொல்லப்படுவதை வன்மையாக கண்டிப்பதாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி கண்டனம் தெரிவித்திருந்தார்.
காங்கிரஸ் எம்.பி
இந்நிலையில், இந்தியாவில் இஸ்ரேலை எதிர்த்து காங்கிரஸ், கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் போராட்டங்களும், பேரணியும் நடத்தி வருகின்றனர். முக்கியமாக, பாலஸ்தீன மக்களுக்கு கேரளாவில் அதிகமான ஆதரவு உள்ளது.
அந்தவகையில் கேரளாவில் நடந்த பாலஸ்தீன ஒற்றுமைப் பேரணியில் காங்கிரஸ் எம்.பி ராஜ்மோகன் உன்னிதன் கலந்து கொண்டு பேசுகையில், "இரண்டாம் உலகப் போருக்கு பின்பு, போர்க் குற்றங்களில் ஈடுபட்டவர்களுக்கு நியூரம்பெர்க் என்ற விசாரணை நடத்தப்பட்டது. இந்த விசாரணையின் போது குற்றவாளிகள் விசாரணையின்றி சுட்டுக் கொல்லப்படுவார்கள்.
அதே போல, இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு குற்றவாளியாகர் நிற்கிறார். அவரை விசாரணையின்றி சுட்டுக்கொல்ல வேண்டிய நேரம் இது தான்" என பேசியுள்ளார். இவர் பேசிய கருத்துக்கள் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |