தோள்பட்டை, கழுத்து வலியை போக்கனுமா? இந்த பயிற்சிகளை தொடர்ந்து செய்தாலே போதும்
இன்றைக்கு கை, கால் வலிகளை போல் கழுத்து வலி, கழுத்து பிடிப்பு பிரச்சனைகளும் பொதுவான பிரச்சனைகளாக மாறி வருகின்றன.
இதற்கு முக்கிய காரணம் நீண்ட நேரம் கம்ப்யூட்டர் முன்பு அமர்ந்து வேலை செய்வது தான்.
அதுமட்டுமின்றி நாள் முழுவதும் நாற்காலி முன்பு அமர்ந்திருப்பது, வீட்டில் இருந்து வேலை செய்யும்போது சரியான பொஷிசனில் அமராமல் இருப்பது போன்ற காரணங்களால், கழுத்தை நேராக வைக்காமல் நம்மை அறியாமலேயே குறுக்கி வைக்கிறோம்.
இதனால், தசைகள் இறுகி கழுத்தில் பிடிப்பு அல்லது வலியை ஏற்படுத்துகின்றன. இதனை போக்க ஒரு சில உடற்பயிற்சிகள் உள்ளன. தற்போது அவற்றை எப்படி செய்யலாம் என்பதை பார்ப்போம்.
மேலே, கீழே
தரையில் நேராக நின்று கழுத்தை மட்டும் மேலும் கீழும் அசைக்க வேண்டும். இப்படி தொடர்ந்து 20 நொடிகள் செய்ய வேண்டும்.
இடது, வலது
தரையில் நேராக நின்று கொண்டு கழுத்தை வலது புறம் திருப்பி, பின் நோக்கி நேராக்கி அதன் பின் இடது புறம் திருப்ப வேண்டும். இப்படி 20 நொடிகள் செய்ய வேண்டும்.
கழுத்தை பின்பக்கம் சாய்த்தல்
கைகளை மோவாயில் வைத்தபடி கழுத்தை பின்னால் சாய்க்கவும். 20 நொடிகள் இந்த நிலையில் இருந்த பின்னர் பழைய நிலைக்கு வரவும்.
கழுத்தை முன்பக்கம் குனியவைத்தல்
கைகளை பின்னந்தலையில் வைத்தபடி கழுத்தை முன்பக்கமாக குனியவும். இந்த நிலையில் 20 விநாடிகள் இருக்கவும்.
மேலே சொன்ன இந்த பயிற்சிகளை தொடர்ந்து செய்து வந்தால் விரையில் நல்ல பலனை காணலாம். இவ்வாறு செய்வதால் தோள்பட்டை தசைகள் வார்ம் அப் ஆகும்.
கழுத்து தசைகள் நன்றாக ஸ்ட்ரெச் ஆகும். இந்த பகுதிகளில் ரத்த ஓட்டமும், இந்த பகுதிகளில் ரத்த ஓட்டமும், வளைந்து கொடுக்கும் தன்மையும் அதிகரிக்கும்.