336 ரன் வித்தியாசம்! என் வாழ்க்கை முழுதும் நினைத்து மகிழும் அளவுக்கான வெற்றி - சுப்மன் கில்
இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது குறித்து அணித்தலைவர் சுப்மன் கில் நெகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
சுப்மன் கில்
எட்ஜ்பாஸ்டனில் நடந்த டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 336 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தியது.
வெளிநாட்டு மைதானத்தில் இந்திய அணி பெற்ற மிகப்பெரிய வெற்றி இதுதான். இந்த டெஸ்டில் 430 ஓட்டங்கள் குவித்த சுப்மன் கில் (Shubman Gill) ஆட்டநாயகன் விருது பெற்றார்.
போட்டிக்கு பின் பேசிய சுப்மன் கில், "எட்ஜ்பாஸ்டனில் பெற்ற வெற்றி என் வாழ்க்கை முழுவதும் நினைத்து பார்த்து மகிழும் அளவிற்கான ஒரு வெற்றி.
நான் ஓய்வு பெற்றால் என் கிரிக்கெட் வாழ்க்கையின் மகிழ்ச்சியான தருணங்களில் ஒன்றாக இதைப் பார்ப்பேன்!" என தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |