பட புரொமோஷனில் சித்தார்த்துக்கு நடந்த சம்பவம்: குரல் கொடுத்த நடிகர் ஆதி
கர்நாடகா மாநிலத்திற்கு 'சித்தா' படத்தின் புரொமோஷனுக்காக சென்ற நடிகர் சித்தார்த்தை அவமதித்த விவகாரத்திற்கு, நடிகர் ஆதி கண்டனம் தெரிவித்துள்ளார்.
சித்தார்த்துக்கு எதிர்ப்பு
நடிகர் சித்தார்த் தயாரித்து நடித்திருக்கும் படம் ‘சித்தா’. கர்நாடகா மாநிலத்தில் நடைபெற்ற இந்த படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சியில் சித்தார்த் கலந்து கொண்டு பேசினார்.
Actor #Siddharth was forced to leave a press conference he was attending of #Tamil movie "#Chiththa" on #September 28, due to angry #protestors over the #Cauverywater dispute. pic.twitter.com/qviXRWcgLM
— Madhuri Adnal (@madhuriadnal) September 28, 2023
அப்போது, காவிரி பிரச்சனையால் அங்குள்ள கன்னட அமைப்பினர் தகராறு செய்ததால் அவர் நிகழ்வில் இருந்து வெளியேறினார். இந்த சம்பவத்திற்கு, நடிகர் பிரகாஷ் ராஜ், சிவராஜ் குமார், நாம் தமிழர் கட்சி சீமான் ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
அவங்க செஞ்சது தப்பு
இந்நிலையில், சென்னை கடற்கரையில் உலக இதய தினத்தையொட்டி நடிகர் ஆதி மற்றும் நிக்கி கல்ராணி கலந்து கொண்டனர். அப்போது, கன்னட அமைப்புகளால் சித்தார்த் அவமதிக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக செய்தியாளர்கள் நடிகர் ஆதியிடம் கேள்வி எழுப்பினர்.
அதற்கு அவர், "சினிமா, நடிகர் என்பதை எல்லாம் தாண்டி எல்லோரும் ஒன்று தான். மாநிலங்களுக்கு இடையே உள்ள பெயர்கள் எல்லைகளை பிரிப்பதற்காகவும், நிர்வாக காரணங்களுக்காக மட்டுமே பிரிக்கப்பட்டுள்ளது. மற்றபடி எல்லோரும் ஒன்று தான்.
முக்கியமாக சினிமா நடிகர்களை தடுப்பது என்பது தவறான ஒன்று. அதை நாம் செய்தலும் தவறு தான். அவர்கள் செய்ததும் தவறு தான்" என்றார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |