ஓம விதைகளை அளவுக்கு மீறி எடுத்து கொண்டால் என்ன ஆகும் தெரியுமா?
Headache
Dental Problem
Pregnancy
By Kishanthini
நாம் அன்றாடம் பயன்படுத்தும் சமையலில் ஓம விதைகளும் ஒன்றாகும்.
ஓமம் விதைகளில் அதிகளவு வைட்டமின்களும், நியாசின், தியாமின், சோடியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், கால்சியம் உள்ளிட்ட மினரல்கள் அதிகளவில் உள்ளன.
இதுமட்டுமல்லாது, ஓமம் விதைகளில் கார்போஹைட்ரேட்ஸ், கொழுப்பு அமிலங்கள், நார்ச்சத்து, புரதங்கள் மற்றும் ஆன்டி ஆக்சிடண்ட்கள் உள்ளன.
ஓமம் விதைகளினால் நம் உடலுக்கு பல்வேறு நன்மைகள் விளைகின்றன. என்னதான் ஓமத்தில் நிறைய ஆரோக்கியபலன்கள் இருந்தாலும் , இதிலும் சில பக்க விளைவுகள் இருக்கத்தான் செய்கின்றன.
எனவே இதனை அளவோடு பயன்படுத்துவது நல்லதாகும். தற்போது இதனை அதிகளவு எடுத்து கொள்வதனால் ஏற்படும் பக்கவிளைவுகள் என்ன என்பதை பார்ப்போம்.
- ஓமம் அசிடிட்டியை குறைக்கும் என்றாலும் கூட, அதை நீங்கள் அதிகப்படியாக சாப்பிட்டீர்கள் என்றால் ஆசிட் ரிஃப்லெக்ஸ், வாயு போன்ற தொந்தரவுகள் ஏற்படக் கூடும்.
- ஓமத்தில் தைமால் என்னும் பொருள் இருக்கிறது. இது உங்களுக்கு தலைச்சுற்றல், குமட்டல், வாந்தி போன்ற தொந்தரவுகளை ஏற்படுத்தக் கூடும்.
- ஓமத்தில் உள்ள காரத்தன்மை மற்றும் பயோ ஆக்டிவ் பொருள்கள் காரணமாக வாய்ப் பகுதியில் இது வீக்கத்தை ஏற்படுத்தும். இதன் விளைவாக எரிச்சல், வாய்ப்புண் போன்ற பிரச்சினைகள் ஏற்படும்.
- கர்ப்பிணிப் பெண்கள் ஓமத்தை கட்டாயம் தவிர்க்க வேண்டும். வயிற்றில் வளரும் குழந்தைகளுக்கு இது ஆபத்தை ஏற்படுத்தும்.
- ஓமத்தை வெறுமனே அதிகப்படியாக எடுத்துக் கொள்வது உடலுக்கு மிகுந்த தீங்கு விளைவிக்கக் கூடிய நஞ்சாக மாறிவிடும். சில சமயம், உயிர் பலி ஏற்படவும் வாய்ப்புண்டு.
- நீங்கள் அறுவை சிகிச்சை செய்து கொள்ள இருப்பவர் என்றால் கட்டாயம் ஓமத்தை தவிர்க்க வேண்டும். ஏனென்றால், அறுவை சிகிச்சையின் போது இது ரத்தக் கசிவை அதிகப்படுத்தும். ஆகவே, அறுவை சிகிச்சைக்கு 2 வாரங்கள் முன்பாகவே ஓமத்தை நிறுத்தி விட வேண்டும்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US