மேக வெடிப்பால் ஏற்பட்ட பெருவெள்ளம்... இந்திய மாநிலம் ஒன்றில் ராணுவ வீரர்கள் கொத்தாக மாயம்
இந்தியாவின் சிக்கிம் மாகாணத்தில் திடீரென்று ஏற்பட்ட மேக வெடிப்பால் பெருவெள்ளம் உருவாக, அதில் சிக்கிக்கொண்ட ராணுவ வீரர்கள் கொத்தாக மாயமானதாக தகவல் வெளியாகியுள்ளது.
23 ராணுவ வீரர்கள்
சிக்கிம் மாகாணத்தின் ஏரி ஒன்றின் மீதே மேக வெடிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் Lachen Valley பகுதியில் அமைந்துள்ள Teesta நதி கரைபுரண்டுள்ளது. அத்துடன் அருகில் உள்ள அணையில் இருந்து ஆற்றில் அதிக தண்ணீர் திறக்கப்பட்டதை அடுத்து நிலைமை மேலும் மோசமடைந்தது.
Watch: At least 23 troops are reported missing after heavy rains trigger flash floods in India’s northeastern state of Sikkim, local officials say.#India #Sikkim #Floods pic.twitter.com/m8v62wjcHc
— Al Arabiya English (@AlArabiya_Eng) October 4, 2023
இந்த நிலையில், சில ராணுவ வாகனங்கள் சேற்றில் மூழ்கியதாக அதிகாரிகள் தரப்பு தெரிவிக்கின்றனர். இதுவரை 23 ராணுவ வீரர்கள் கொத்தாக மாயமானதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், தேடுதல் மற்றும் மீட்புப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன, மேலும் தகவலுக்காக நாங்கள் காத்திருக்கிறோம் என்று இந்திய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
பல்லாயிரக்கணக்கான மக்கள்
இதனிடையே, முழு சுற்றுப்புறங்களும் வெள்ளத்தில் மூழ்கி, வீடுகள் சேதமடைந்து, மக்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு இடம்பெயர்ந்து வருவதால், மாநிலத்தின் பிற பகுதிகளிலும் மீட்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
@bbc
மேலும், வடக்குப் பகுதியை மாநிலத்தின் மற்ற பகுதிகளுடன் இணைக்கும் இரண்டு பாலங்கள் அடித்துச் செல்லப்பட்டதால், போக்குவரத்து சேவைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
கடந்த ஆண்டும் இதுபோன்ற ஒரு பெருவெள்ளம் ஏற்பட்டு பல்லாயிரக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்ததுடன் குறைந்தது 24 பேர் பலியாகினர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |