ரஷ்யாவின் அதிநவீன போர் வாகனத்தை சின்னாபின்னமாக்கிய எளிய ஆயுதம்: வெளியாகியுள்ள புதிய காட்சி
ரஷ்யாவின் அதிநவீன, மிக விலையுயர்ந்த போர் வாகனத்தை உக்ரைன் வீரர்கள் தாக்கி வெடிக்கச் செய்யும் புதிய வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.
கிழக்கு உக்ரைனிலுள்ள டான்பாஸ் பகுதியில் இந்த தாக்குதல் நிகழ்ந்துள்ளது.
உக்ரைன் பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அந்த புதிய வீடியோவில், ரஷ்யாவுக்குச் சொந்தமான 4 மில்லியன் பவுண்டுகள் பதிப்புடைய T-90M என்னும் போர் வாகனம் வெடித்துச் சிதறும் காட்சிகள் பதிவாகியுள்ளன.
அந்த விலையுயர்ந்த போர் வாகனத்தை தாக்கி அழித்தது, சுமார் 18,500 பவுண்டுகள் மதிப்புடைய ஒரு ஸ்வீடன் தயாரிப்பான ராக்கெட் லாஞ்சர் மூலம் செலுத்தப்பட்ட ராக்கெட் ஆகும்.
ரஷ்யாவின் போர் வாகன தொழில்துறையின் கௌரவமாக கருதப்படும் ஒரு போர் வாகனம், ஸ்வீடன் நாட்டு தயாரிப்பான, ஒரு சிறிய, கையில் வைத்து சுடும் ராக்கெட் லாஞ்சரால் அழிக்கப்பட்டுவிட்டது என ட்வீட் ஒன்றில் உக்ரைன் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அத்துடன், ஸ்வீடன் மக்களுக்கும் மன்னருக்கும் அவர்கள் எங்களுக்கு செய்த உதவிக்காக நன்றி தெரிவித்துக்கொள்கிறோம் என்றும் அந்த ட்வீட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தாக்கி அழிக்கப்பட்ட அந்த அதிநவீன ரஷ்யப் போர் வாகனம் தாக்குதல்களைத் தாங்கும் வகையில் உறுதியான தகட்டால் செய்யப்பட்டிருந்தாலும், உக்ரைன் ஏவுகணை அந்த போர் வாகனத்தின் சக்கரங்களுக்கு நடுவில் தாக்கியதால், அந்த ஏவுகணை வெடித்து, அதனால் உண்டான வெப்பத்தால், ஏற்கனவே போர் வாகனத்துக்குள் வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டுகள் வெடித்ததால், மொத்த வாகனமும் வெடித்துச் சிதறியுள்ளது பின்னர் தெரியவந்துள்ளது.