ஆகஸ்ட் மாதத்தில் டிரம்ப் உயிருக்கு ஆபத்தா? - வைரலாகும் சிம்ப்சன் வீடியோவால் பரபரப்பு
டிரம்ப் உயிருக்கு ஆகஸ்ட் மாதத்தில் ஆபத்து என்ற கணிப்புடன் சிம்ப்சன் வீடியோ வைரலாகி வருகிறது.
சிம்ப்சன் வீடியோ
அமெரிக்காவில் கடந்த 1989 ஆம் ஆண்டு தி சிம்ப்சன்ஸ் என்ற கார்டூன் தொடர் வெளியாகி வருகிறது.
இந்த கார்டூன் தொடர் எதிர்காலத்தில் நடக்கும் நிகழ்வுகளை துல்லியமாக கணிக்கும் எனவும், இந்த தொடரில் வந்துள்ள சில காட்சிகள் நடந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
டிரம்ப் உயிருக்கு ஆபத்தா?
இந்நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்ப் போன்ற தோற்றமுள்ள நபர் ஆகஸ்ட் மாதத்தில் உயிரிழப்பது போன்ற சிம்ப்சன் கார்டூன் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
"கடுமையான மார்பு நோயால் பாதிக்கப்பட்டு ஜனாதிபதி ஆகஸ்ட் 2025 இல் இறப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது" என ஒலிக்கும் பின்னணி குரலுடன் அந்த வீடியோ தொடங்குகிறது.
இந்த வீடியோவில், பிரகாசமான ஆரஞ்சு நிற தோல், தங்க நிற முடி மற்றும் நிலையற்ற தன்மை கொண்ட ஒரு சர்ச்சைக்குரிய ஜனாதிபதி வெள்ளை மாளிகையில் தனியாக நடந்து செல்வது காட்டப்பட்டுள்ளது.
இதில், டிரம்ப் போன்ற தோற்றமுள்ள ஜனாதிபதி, திடீரென்று வலியால் மார்பைப் பிடித்துக் கொண்டு, தேசிய நேரடி ஒளிபரப்பின் போது சரிந்து விழுகிறார்.
உடனடியாக மருத்துவ ஊழியர்கள் வரவழைக்கப்பட்டனர், அவர்களில் ஒருவர், "இது வெறும் மன அழுத்தம் அல்ல, இது ஒரு அறிகுறி" என்று கத்தினார். இந்த வீடியோ, தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
CVF நோய்
கடந்த ஜூலை 17 ஆம் திகதி, டிரம்ப்பிற்கு க்ரானிக் வெனஸ் இன்சஃபிசியன்ஸி (CVF - Chronic Venous Insufficiency ) என்ற நரம்பியல் நோய் இருப்பதை வெள்ளை மாளிகை உறுதிபடுத்தியது.
இதில், நரம்புகளுக்கு ஏற்படும் சேதம் நிரந்தரமானது என்றாலும், இந்த நிலை உயிருக்கு ஆபத்தானது இல்லை. உடற்பயிற்சி மற்றும் மருந்துகள் உள்ளிட்ட சரியான சிகிச்சை மூலம், அறிகுறிகளை நிர்வகிக்க முடியும்.
70 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இது பொதுவானது என்றும், இரத்த பரிசோதனைகள், இதய ஸ்கேன்கள் உட்பட முழு உடல் சுகாதார பரிசோதனை செய்யப்பட்டதில் டிரம்ப் நல்ல உடல்நலத்துடன் இருப்பதாக கூறப்பட்டது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |