சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் தரவு கசிவு - 46,000 பயணிகளின் முன்பதிவு தகவல்கள் பாதிப்பு

Singapore
By Ragavan Nov 04, 2026 11:18 AM GMT
Report

Singapore Airlines Data Breach Hits 46,000 Records: சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் தரவு கசிவு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Singapore Airlines தரவு கசிவு

சிங்கப்பூர் நாட்டின் தேசிய விமான சேவை நிறுவனமான Singapore Airlines நிறுவனத்தில் ஏற்பட்ட தரவு கசிவு சம்பவம் ஆயிரக்கணக்கான பயணிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அந்நிறுவனம் பயன்படுத்தும் முன்பதிவு தொழில்நுட்ப சேவை வழங்குநரான Amadeus நிறுவனத்தில் ஏற்பட்ட இணைய பாதுகாப்பு குறைபாடு காரணமாக சுமார் 46,000 முன்பதிவு பதிவுகள் பாதிக்கப்பட்டிருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Singapore-Airlines-Data-Breach-Hits-46000-Records

நிறுவனம் வெளியிட்ட தகவலின்படி, பாதிக்கப்பட்ட தரவுகளில் பயணிகளின் பெயர்கள், முன்பதிவு குறிப்பு எண்கள், பயண அட்டவணைகள் மற்றும் பயண வகுப்பு தொடர்பான விவரங்கள் அடங்கும்.

மேலும் சுமார் 620 முன்பதிவு பதிவுகளில் மின்னஞ்சல் முகவரிகள், தொலைபேசி எண்கள், பயண ஆவண விவரங்கள் மற்றும் KrisFlyer உறுப்பினர் எண்கள் போன்ற கூடுதல் தனிப்பட்ட தகவல்களும் அணுகப்பட்டிருக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரித்தானியாவில் நிரந்தர வதிவிடத்திற்காக காத்திருப்பு காலம் இரட்டிப்பு

பிரித்தானியாவில் நிரந்தர வதிவிடத்திற்காக காத்திருப்பு காலம் இரட்டிப்பு

இந்த தரவு கசிவு சம்பவம் Singapore Airlines நிறுவனத்தை மட்டும் பாதிக்கவில்லை. இதற்கு முன்பு Cathay Pacific Airways, Japan Airlines, Asiana Airlines மற்றும் Malaysia Airlines உள்ளிட்ட பல விமான நிறுவனங்களும் Amadeus தரவு கசிவு காரணமாக வாடிக்கையாளர் தகவல்கள் பாதிக்கப்பட்டதாக அறிவித்திருந்தன.

எனினும், வங்கிக் கணக்கு விவரங்கள் அல்லது கிரெடிட் கார்டு தகவல்கள் கசிந்ததாக எந்த ஆதாரமும் இல்லை என Amadeus நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளதாக Singapore Airlines தெரிவித்துள்ளது. மேலும், பயணிகளின் முன்பதிவுகளிலும் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.

ரிலையன்ஸ் அனில் அம்பானி குழுமத்தின் ரூ.510 கோடி சொத்துகள் மேலும் முடக்கம்

ரிலையன்ஸ் அனில் அம்பானி குழுமத்தின் ரூ.510 கோடி சொத்துகள் மேலும் முடக்கம்

பாதிக்கப்பட்டிருக்கக்கூடிய பயணிகளை நிறுவனம் நேரடியாக தொடர்புகொண்டு வருகிறது. குறிப்பாக எதிர்காலத்தில் பயணம் செய்யவுள்ளவர்களுக்கு பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புதிய முன்பதிவு குறிப்பு எண்கள் வழங்கப்பட உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரத்தில், இந்த சம்பவம் Singapore Airlines நிறுவனத்தின் உள்துறை தகவல் தொழில்நுட்ப அமைப்புகளை நேரடியாக பாதிக்கவில்லை என்றும், பாதுகாப்பு குறைபாடு வெளிப்புற சேவை வழங்குநரிடம் ஏற்பட்டதாகவும் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.

இந்த தரவு கசிவு சம்பவம் உலகளாவிய விமானத் துறையில் இணைய பாதுகாப்பு மீதான கவலையை மீண்டும் அதிகரித்துள்ளதுடன், வாடிக்கையாளர் தகவல்களை பாதுகாப்பதில் தொழில்நுட்ப சேவை வழங்குநர்களின் பொறுப்பும் முக்கியத்துவமும் மீண்டும் கவனத்திற்கு வந்துள்ளது.

ரூ.53,866 கோடியில் இந்திய கடற்படைக்கு 8 புதிய போர்க்கப்பல்கள் - பாதுகாப்புத் துறை மெகா ஒப்பந்தம்

ரூ.53,866 கோடியில் இந்திய கடற்படைக்கு 8 புதிய போர்க்கப்பல்கள் - பாதுகாப்புத் துறை மெகா ஒப்பந்தம்

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Harrow, United Kingdom

27 Oct, 2022
மரண அறிவித்தல்

அநுராதபுரம், கோப்பாய், பிரான்ஸ், France

05 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Sanaa, Yemen, சென்னை, India, Toronto, Canada, Sacramento, United States

07 Nov, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு, நீர்கொழும்பு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, Mississauga, Canada

07 Nov, 2026
மரண அறிவித்தல்

பேசாலை, Toronto, Canada

07 Nov, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

குடத்தனை, முகமாலை, பரந்தன்

28 Oct, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Toronto, Canada

14 Nov, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தாவடி, கொக்குவில் மேற்கு, கொழும்பு, அமெரிக்கா, United States, கனடா, Canada

09 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பளை, இராமநாதபுரம்

22 Oct, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Markham, Canada

06 Nov, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நியூ யோர்க், United States

08 Nov, 2018
16ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Northeim, Germany, Birmingham, United Kingdom

28 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கொழும்பு

08 Nov, 2024
மரண அறிவித்தல்

சில்லாலை, கொழும்பு, நீர்கொழும்பு, London, United Kingdom

21 Oct, 2026
நன்றி நவிலல்

ஹட்டன், நோர்வூட், கொட்டகலை, கொழும்பு

02 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

26 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US