குண்டு வெடித்த ராமேஸ்வரம் கஃபேயில் தோசை சாப்பிட்ட சிங்கப்பூர் தூதர்! வைரலாகும் புகைப்படம்
சமீபத்தில் குண்டு வெடித்த ராமேஸ்வரம் கஃபேயில் சிங்கப்பூர் தூதர் தோசை வாங்கி சாப்பிட்ட புகைப்படம் வைரலாகி வருகிறது.
கடந்த 1 -ம் திகதி பெங்களூரு புரூக்பீல்டில் உள்ள 'ராமேஸ்வரம் கஃபே' ஹொட்டலில் குண்டுவெடிப்பு சம்பவம் நடந்தது. இந்த சம்பவத்தில் காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதில் குண்டு வைத்த நபரையும் என்.ஐ.ஏ என்ற தேசிய புலனாய்வு அமைப்பினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சிங்கப்பூர் தூதர்
இந்நிலையில், இந்தியாவுக்கான சிங்கப்பூர் தூதர் சைமன் வாங்க் நேற்று ஒயிட்பீல்டின் புரூக்பீல்டு பகுதிக்கு அலுவலக வேலையாக பயணம் மேற்கொண்டார்.
இதனைத்தொடர்ந்து, தனது அதிகாரிகளுடன் குண்டுவெடிப்பு நடந்த ஹொட்டலுக்கு சென்றார். அங்கு, தோசை மற்றும் ஃபில்டர் காபி குடித்ததாக தனது ட்விட்டர் எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர் அந்த பதிவில், "மீண்டும் திறக்கப்பட்ட ராமேஸ்வரம் கபேயில் உணவு சாப்பிட்டதில் மகிழ்ச்சியாக உள்ளது. இந்தியாவில் உள்ள எங்கள் நண்பர்களுடன் நாங்கள் நிற்கிறோம்" என்று கூறியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |