பல வருட கோரிக்கைக்கு கிடைத்த அனுமதி - உணவாகப்போகும் 16 வகை பூச்சிகள்
பதினாறு வகையான பூச்சிகள் சிங்கப்பூரில் உணவாக அங்கீகரிக்கப்பட்டுள்ளதாக சிங்கப்பூர் உணவு நிறுவனம் (SFA) தெரிவித்துள்ளது.
பதினாறு வகையான பூச்சிக்கு அனுமதி வழங்கிய சிங்கப்பூர்
சிங்கப்பூரில் வசிக்கும் மக்களின் தொகையில் 50 சதவீதத்திற்கு அதிகமாக வெளிநாட்டினவர்கள் தான் இருக்கிறார்கள்.
மூன்றில் ஒரு பங்கு தொழிலாளர்கள், அதாவது 13 லட்சத்துக்கும் அதிகமானோர் இந்தியா, ஜப்பான், சீனா, இந்தோனேசியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து வந்தவர்களாக இருக்கிறார்கள்.
இதனால் அங்குள்ள உணவு பழக்கமும் சற்றே மாறிய வண்ணத்தில் தான் உள்ளது. காரணம் பல நாடுகளில் இருந்து வரும் தொழிலாலர்களால் தான்.
அவர்களை அடிப்படையாக வைத்து தான் உணவு முறையும் மாறியமைந்துள்ளது.

30 நாட்களில் முடி வளர்ச்சியை பல மடங்கு அதிகரிக்கும் செம்பருத்தி எண்ணெய் - வீட்டிலேயே செய்வது எப்படி?
தாய்லாந்து, சீனா, ஜப்பானில் அதிகம் உண்ணப்படும் 16 வகையான பூச்சிகளை சிங்கப்பூரிலும் உணவாக சமைக்கலாம் என சிங்கப்பூர் அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது.
கிரிக்கெட் பூச்சி, வெட்டுக்கிளி, பட்டுப்புழுக்கள் உள்ளிட்டவற்றை தாய்லாந்து, சீனா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யவும் சிங்கப்பூர் உணவு நிறுவனம் அனுமதி வழங்கியுள்ளது.
பல ஆண்டுகளுக்கு முன் வைக்கப்பட்ட கோரிக்கையின் அடிப்படையில் இரண்டு ஆண்டுகளாக ஆலோசனை நடத்தப்பட்டு குறித்த தீர்மானம் தற்போது வழங்கப்பட்டுள்ளது.
மேலும் பண்ணைகளில் வளர்க்கும் பூச்சிகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும். காடுகளில் வளர்பவற்றை உணவாக்கக்கூடாது, பூச்சிகளை சுத்தம் செய்தே சமைக்க வேண்டும் எனவும் சிங்கப்பூர் அரசாங்கத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |