மலேசியாவில் வசிக்கும் தமிழருக்கு அறிவிக்கப்பட்ட தூக்கு தண்டனை! அரசு தரப்பில் கொடுக்கப்பட்ட விளக்கம் என்ன?
மலேசியாவில் வசிக்கும் தமிழருக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை குறித்து அந்நாட்டு அரசாங்கம் தெளிவான விளக்கத்தை அளித்துள்ளது.
மலேசியாவில் இருந்து தனது தொடையில் மறைத்து வைத்து 42.72 கிராம் ஹெராயின் போதைப்பொருளை கடத்தி வந்ததற்காக 2009ஆம் ஆண்டு சிங்கப்பூர் அதிகாரிகளால் நாகேந்திரன் கைது செய்யப்பட்டார்.
போதைப்பொருள் கடத்திய வழக்கில் மலேசியரான நாகேந்திரனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு இருந்தது. கடந்த புதன்கிழமை அவருக்கு மரண தண்டனையை நிறைவேற்ற நாள் குறிக்கப்பட்டிருந்த நிலையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதியானது.
இதையடுத்து 33 வயதான நாகேந்திரனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் அவருக்கு வழங்கப்பட்ட தூக்கு தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு குறித்து மலேசியா பிரதமர் இஸ்மாயில் மற்றும் வெளியுறவு துறை அமைச்சர் டத்தோ சயிஃபுதீன் ஆகியோர் கடிதம் எழுதி உள்ளனர்.
அதில் அவர் கூறியதாவது, போதை வழக்கில் கைது செய்யப்பட்ட நாகேந்திரனுக்கு நியாயமான முறையில் தான் மரணதண்டனை வழங்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் முறையான விசாரணை நடைபெற்றது.
சிங்கப்பூர் சட்டத்தின் கீழ் அனைத்து வித நடைமுறைகளும் உரிய முறையில் பின்பற்றதாக அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.