சிங்கப்பூர் எதிர்க்கட்சி தலைவர் குற்றவாளி என தீர்ப்பு: அபராதம் விதித்து நீதிமன்றம் அதிரடி
இந்திய வம்சாவளியை சேர்ந்த சிங்கப்பூரின் எதிர்கட்சி தலைவரை அந்நாட்டு நீதிமன்றம் குற்றவாளி என தீர்ப்பளித்து அபராதமும் விதித்துள்ளது.
நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
சிங்கப்பூரில் எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சி தலைவர் பிரிதம் சிங் நாடாளுமன்ற குழுவிடம் பொய் சொன்ன இரண்டு குற்றச்சாட்டுகளில் குற்றவாளி என திங்கட்கிழமை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
48 வயதான எதிர்க்கட்சி தலைவர் பிரிதம் சிங், இந்த வழக்கில் குற்றவாளி என நிருபிக்கப்பட்டதுடன், அவருக்கு அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் 5 ஆண்டுகள் வரை அவர் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கவும், இந்த ஆண்டு நடைபெற இருக்கும் தேசிய தேர்தலில் போட்டியிடவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
அபாரத தொகை
தீர்ப்பை வழங்கிய நீதிபதி லூக் டான், பிரிதம் சிங் மீது நிருபிக்கப்பட்ட ஒவ்வொரு குற்றச்சாட்டிற்கும் தலா S$7,000 ($5,224) அபராதமாக செலுத்த உத்தரவிட்டார்.
தேர்தல் விதிகளின் படி, அபராதம் S$10,000 க்கும் மேல் இருந்தால், அல்லது ஓராண்டுக்கு மேல் சிறை தண்டனை விதிக்கப்பட்டால் அவரால் நவம்பர் மாதத்திற்குள் நடைபெற தேர்தலில் போட்டியிட முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |