வெளிநாட்டில் இந்திய வம்சாவளி பெண்ணால் ஏற்பட்ட குழப்பம்: கைது செய்த பொலிசார்
நண்பர் ஒருவர் தற்கொலைக்கு முயல்வதாக கூறி அவசர உதவி கேட்டு சிங்கப்பூர் பொலிசாருக்கு அழைப்பு விடுத்த இந்திய வம்சாவளி பெண் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.
குழப்பத்தை ஏற்படுத்தியதாக
27 வயதான குறித்த பெண் பொய் கூறியதாக விசாரணையில் தெரிய வந்ததை அடுத்தே, குழப்பத்தை ஏற்படுத்தியதாக கூறி சிங்கப்பூர் பொலிசார் வழக்கு பதிந்துள்ளனர்.
நீதிமன்ற தரவுகளின் படி, Salvinder Kaur என்ற அந்த பெண்மணி ஆகத்து 26ம் திகதி தமது நண்பர் ஒருவர் தற்கொலைக்கு முயல்வதாக அவசர உதவி இலக்கத்திற்கு தொடர்பு கொண்டுள்ளார்.
Credit: iStock
ஆனால் விசாரணையில் அது உண்மை அல்ல என்பது உறுதி செய்யப்பட்டது. குறித்த பெண் திட்டமிட்டே, அலைபேசியை பயன்படுத்தாமல் தரைவழி தொலைபேசியை பயன்படுத்தியுள்ளார்.
இதனையடுத்து விசாரணை முன்னெடுத்த பொலிசார் செப்டம்பர் 16ம் திகதி அவரை கைது செய்துள்ளனர். சிங்கப்பூரில் ஆண்டு பிறந்து கடந்த ஆகத்து மாதம் வரையில் அவசர உதவி இலக்கம் 999க்கு மொத்தம் 1.3 மில்லியன் அழைப்புகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இது நாள் ஒன்றிற்கு 5,000 அழைப்புகள் என்றே கணக்கிடப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |