பொறுப்பான நாடுகளின் பட்டியல்; அமெரிக்கா, சீனாவை முந்திய இந்தியா
பொறுப்பான நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா சீனா ஆகிய நாடுகளை இந்தியா முந்தியுள்ளது.
பொறுப்பான நாடுகளின் பட்டியல்
ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் மற்றும் ஐஐஎம் மும்பையின் கல்வி ஆதரவுடன் உலக அறிவுசார் அறக்கட்டளை (WIF) பொறுப்பான நாடுகளின் குறியீட்டை (RNI - Responsible Nations Index) அறிமுகப்படுத்தியுள்ளது.

இதில், குடிமக்கள், சுற்றுச்சூழல் மற்றும் உலகளாவிய சமூகம் மீதான நாடுகளின் பொறுப்பின் அடிப்படையில் 58 குறியீடுகளை வைத்து 154 நாடுகள் வரிசைப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த RNI குறியீட்டை இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வெளியிட்டார்.
இந்த பட்டியலில், 0.619 மதிப்பெண்களுடன் சிங்கப்பூர் முதலிடம் பிடித்துள்ளது.

சுவிட்சர்லாந்து 2வது இடத்திலும், டென்மார்க் 3வது இடத்திலும், சைப்ரஸ் 4வது இடத்திலும், ஸ்வீடன் 5வது இடத்திலும் உள்ளது.
0.551 மதிப்பெண்களுடன் இந்தியா 16வது இடத்தில் உள்ளது.
மேலும், பிரான்ஸ் 17வது இடத்திலும், பிரித்தானியா 25வது இடத்திலும், கனடா 45வது இடத்திலும், அமெரிக்கா 66வது இடத்திலும், சீனா 68வது இடத்திலும், இலங்கை 77வது இடத்திலும் பாகிஸ்தான் 90வது இடத்திலும் உள்ளது.
மத்திய ஆப்பிரிக்க குடியரசு 0.357 மதிப்பெண்களுடன் கடைசி நாடாக 154வது இடத்தில் உள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |