ரூ.328 கோடி அபராதம் செலுத்திய பிரபல தொழிலதிபர்.., பின்னணியில் இருக்கும் கார் விவகாரம்
பிரபல தொழிலதிபர் 142 வெளிநாட்டுக்கார்களை மதிப்பு குறைத்து இறக்குமதி செய்ததற்காக ரூ.328 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
என்ன பிரச்சனை?
மும்பையை சேர்ந்த தொழிலதிபரும், ரேமாண்ட் குரூப் நிர்வாக இயக்குநருமானவர் கெளதம் சிங்கானியா (Gautam Singhania). இவர், அண்மையில் தனது மனைவி நவாஸ் மோடியை பிரிவதாக அறிவித்தார். பின்னர், இருவரும் சொத்துக்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் Gautam Singhania, மும்பை கம்பல்லா ஹில்லில் இருக்கும் ஜெ.கே.ஹவுசில் கார் மியூசியம் வைக்க ஏற்பாடு செய்து வருகிறார். இதற்காக உலகம் முழுக்க கார்களை வாங்கி இறக்குமதி செய்து வருகிறார். ஏற்கனவே, இவரிடம் 138 விண்டேஜ் கார்கள் உள்ளது.
இந்நிலையில், இவர் மீது வெளிநாட்டுக்கார்களை மதிப்பு குறைத்து இறக்குமதி செய்தததாக குற்றச்சாட்டு எழுந்தது.
ரூ.328 கோடி அபராதம்
கடந்த 2018 -21 -ம் ஆண்டுகளில் ரேமாண்ட் குரூப் வெளிநாடுகளில் கார்களை ஏலத்தில் எடுத்து இந்தியாவிற்கு இறக்குமதி செய்தது. அப்போது ரூ.229.72 கோடிக்கு வரி ஏய்ப்பு செய்ததாக நேரடிவரி புலனாய்வுத்துறை Gautam Singhania -க்கு நோட்டீஸ் அனுப்பியது.
அதில், ரூ.229.72 கோடி அபராதமும், அதனுடன் வட்டியும் சேர்த்து மொத்தம் ரூ.328 கோடி அபராதம் செலுத்த வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தது. பின்னர், ஜெ.கே.இன்வெஸ்மென்ட் நிறுவனம் சார்பாக ரூ.328 கோடி அபராத தொகை செலுத்தப்பட்டது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |