ரிஷி சுனக் தலைமையிலான அரசில் அமைச்சர் பதவி விலகல்: நெருக்கடியில் கன்சர்வேட்டிவ் கட்சி
கன்சர்வேட்டிவ் கட்சியின் அமைச்சர் பதவியில் இருந்து சர் கவின் வில்லியம்சன் விலகல்.
பிரதமர் ரிஷி சுனக் தலைமையிலான அரசிலிருந்து ராஜினாமா செய்யும் முதல் அமைச்சர்.
பிரதமர் ரிஷி சுனக் தலைமையிலான கன்சர்வேட்டிவ் கட்சியின் எம்.பி சர் கவின் வில்லியம்சன் தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை தொடர்ந்து தனது டோரி எம்.பி பதவியில் இருந்து விலகியுள்ளார்.
கடந்த மாதம் கன்சர்வேட்டிவ் கட்சியின் சக ஊழியரான டோரி எம்.பி ஒருவருக்கு தவறான குறுஞ்செய்திகளை அனுப்பியதாகவும், நாட்டின் பாதுகாப்பு செயலாளராக மூத்த அரசு ஊழியரை கொடுமைப்படுத்தியதாகவும் எம்.பி சர் கவின் வில்லியம்சன் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டது.
இந்த நிலையில் தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை கருத்தில் கொண்டு தனது அமைச்சர் பதவியிலிருந்து விலகுவதாக சர் கவின் வில்லியம்சன்(Sir Gavin Williamson ) அறிவித்துள்ளார்.
— Gavin Williamson (@GavinWilliamson) November 8, 2022
இது தொடர்பாக அவர் தெரிவித்துள்ள தகவலில், தன் நடத்தை மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை மறுப்பதாகவும், தன் மீது சுமத்தப்பட்டுள்ள கறையை துடைப்பதே தற்போது தன்னுடைய நோக்கம் என்று தெரிவித்துள்ளார்.
அத்துடன் இந்த குற்றச்சாட்டுகள் முழுவதும் கன்சர்வேட்டிவ் கட்சியின் நற்செயல்களில் இருந்து மக்களை திசை திருப்பும் முயற்சி என்றும், தனது ராஜினாமாவிற்காக எந்தவொரு பணி நீக்க ஊதியமும் பெறவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
To dispel any speculation, I want to make it clear that I will not be taking any severance. This is taxpayers’ money and it should go instead toward the Government‘s priorities like reducing the NHS’s waiting lists.
— Gavin Williamson (@GavinWilliamson) November 8, 2022
சர் கவின் வில்லியம்சன் தனது ராஜினாமா கடிதத்தில், அரசாங்கத்தில் இருந்து விலகுவது உண்மையில் மிகவும் வருத்தம், ஆனால் பிரதமர் ரிஷி சுனக்கிற்கு தன்னுடைய முழு ஆதரவும் பின் இருக்கையில் இருந்து முழு மனதுடன் வழங்குவதாக குறிப்பிட்டுள்ளார்.
இதையடுத்து சர் கவின் வில்லியம்சனின் ராஜினாமாவை மிகப்பெரிய வருத்தத்துடன் ஏற்றுக்கொண்ட பிரதமர் ரிஷி சுனக், தனிப்பட்ட ஆதரவிற்கும் விசுவாசத்திற்கும் சர் கவின் வில்லியம்சனுக்கு நன்றி தெரிவித்தார்.
மேலும் அடுத்தடுத்த கன்சர்வேட்டிவ் அரசாங்கத்தில் உங்களுடைய அர்ப்பணிப்பு அசைக்க முடியாதது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
கூடுதல் செய்திகளுக்கு: அமெரிக்க இடைத்தேர்தலில்… வெற்றிகளை குவித்து அசத்தும் இந்திய வம்சாவளியினர்!
சர் கவின் வில்லியம்சனின் ராஜினாமா கடிதத்தில், சக ஊழியருக்கு தவறான குறுஞ்செய்தி அனுப்பிய குற்றச்சாட்டுக்கு இணங்குவதாக தெரிவித்து, சம்பந்தப்பட்ட ஊழியரிடம் மன்னிப்பு கேட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
PA MEDIA