யுத்தத்திற்கு பின் இஸ்ரேல் எப்படி இருக்கிறது? (காணொளி)
இஸ்ரேலில் போருக்கு பின்னான நிலைமை எப்படி இருக்கிறது என்பது குறித்து, ஐபிசி தமிழின் சிஇஓ மற்றும் மூத்த ஊடகவியலாளருமான நிராஜ் டேவிட் தெரிவித்துள்ளார்.
அவர் கூறும்போது, இஸ்ரேலின் புலனாய்வுப் பிரிவாக வெளியே தெரிவது மொஸாட். ஆனால் மொத்தம் மூன்று உளவுப்பிரிவுகளை இஸ்ரேல் கொண்டுள்ளது.
ஒன்று மொஸாட்; அடுத்து Shin Bet என்று அழைக்கப்படும் உள்ளக பாதுகாப்பு அமைப்பான ISA (the Is,rael Security Agency) மற்றும் Aman எனும் இராணுவப் புலனாய்வு (Military Intelligence Directorate) ஆகும்.
இங்குள்ள 100 விதமான யூதர்கள் இராணுவப் பயிற்சி பெற்றவர்கள்; எல்லோருமே புலனாய்வாளர்கள்தான். இந்நாட்டில் 18 வயதை கடந்தவுடன் கண்டிப்பாக மூன்று ஆண்டுகள் இராணுவப் பயிற்சியைப் பெற வேண்டும்.
எனவே அவர்களுக்கு தகவல்களைத் திரட்டுவது, ஒரு விடயத்தைக் கடந்து அப்பால் சென்று எப்படி பார்ப்பது என்ற நுணுக்கம் கற்பிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கான வலைப்பின்னல் இருக்கின்றது.
இஸ்ரேலினுடைய வான் எல்லைக்குள் பயணிகளின் விமானம் நுழையும்போது, ஒரு Emergency Landing எச்சரிக்கையுடன்தான் நுழைகிறது. 45 நிமிடங்களுக்கு முன்பே இது செயல்படுத்தப்படுகிறது.
அச்சம் நிறைந்த சூழ்நிலையில்தான் இவர்கள் வாழ்ந்துகொண்டிருக்கின்றனர். எல்லா பக்கங்களிலும் இருந்தும் அச்சுறுத்தல் இஸ்ரேலை தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன.
மேலதிக தகவல்களுக்கு காணொளியைக் காண்க
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |