வீடு புகுந்து வாலிபர் வெட்டிக்கொலை! தாயே கொன்றது அம்பலம்? பரபரப்பு தகவல்கள்
சிவகங்கை மாவட்டத்தில் வீடு புகுந்து வாலிபர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் திடீர் திருப்பமாக சொத்திற்காக தாய் மற்றும் சகோதரிகளே கூலிப்படையை ஏவி கொலை செய்தது கண்டறியப்பட்டுள்ளது.
வாலிபர் படுகொலை
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி பாப்பா ஊரணி நாச்சுழியேந்தல் பகுதியில் வசித்து வருபவர் இந்திரா இவரது மகன் அலெக்ஸ்பாண்டியன் (28) வசித்து வந்துள்ளார்.
கடந்த மாதம் 30-ம் தேதி இரவில் வீட்டிற்குள் தூங்கிக் கொண்டிருந்த அலெக்ஸ்பாண்டியனை, ஒரு கும்பல் திடீரென வீட்டிற்குள் புகுந்து சரமாரியாக வெட்டி கொலை செய்தது.
@thanthi
இந்த கொலை தொடர்பாக காரைக்குடி தெற்கு பொலிஸார் நடத்திய விசாரணையில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளிவந்துள்ளன.
அலெக்ஸ்பாண்டியனை அவரது உடன் பிறந்த சகோதரிகளும், தாய் இந்திராவும் சேர்ந்தே கூலிப்படையை ஏவி கொலை செய்திருப்பது தெரிய வந்துள்ளது.
கோடிக் கணக்கில் உள்ள சொத்துகளை பெண் பிள்ளைகள் மட்டுமே அனுபவிக்க வேண்டும் எனத் திட்டமிட்டு கொலை நடத்தியிருப்பது அம்பலமாகியுள்ளது.
தாய் போட்ட திட்டம்
ஆண் வாரிசு உயிருடன் இருந்தால் தன் மகள்களுக்கும் தனக்கும் சொத்து கிடைக்காது என இந்திரா நினைத்துள்ளார்.
இதனால் தனது இரு மகள்களுடன் சேர்ந்து பேசி முடிவெடுத்து கூலிப்படையை ஏவி அலெக்ஸ் பாண்டியனை கொலை செய்துள்ளனர்.
@thanthi
இந்த நிலையில் கைது செய்யப்பட்ட கூலிப்படையினரை விசாரிக்கையில் அவர்கள் உண்மையை கூற பொலிஸாரே திகைத்துப் போயிருக்கிறார்.
பின்னர் அலெக்ஸ் பாண்டியனின் தாய் இந்திரா, மூத்த சகோதரி தமிழரசி, இளைய சகோதரியான இந்திரா ஆகியோரை காவல் துறை கைது செய்து விசாரணையில் நடத்தியதில் சொத்திற்காக நடத்தப்பட்ட கொலை என்பது உறுதியாகியுள்ளது.
கொலையில் ஈடுபட்ட கூலிப்படையை சேர்ந்த வினித், விருது நகர் கருப்பசாமி, விஜயகுமார், ஆத்திமேடு வெங்கடேஸ்வரன், ராஜபாளையம் கிறிஸ்துராஜபுரம் அந்தோணி மற்றும் 2 சிறுவர்கள் உட்பட மொத்தம் 9 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
தனது சொந்த மகனையே சொத்திருக்காக கூலிப்படையை ஏவி கொலை செய்ய துணிந்துள்ள இந்திரா மற்றும் அவரது மகள்களின் செயல் அந்த பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.