ஒரே குடும்பத்தை சேர்ந்த ஆறு பேர் வீட்டில் சடலமாக மீட்பு! சிக்கிய கடிதம்.. புகைப்படங்கள்
இந்தியாவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் வீட்டில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில் முக்கிய குற்றவாளியை பொலிசார் கைது செய்துள்ளனர்.
ஹரியானாவின் ஹம்பாலாவை சேர்ந்தவர் சுக்விந்தர். காப்பீடு நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். சில தினங்களுக்கு முன்னர் சுக்விந்தர் தனது தந்தை சங்கட் ராம் (65), தாய் மஹிந்தர் கவுர் (62), மனைவி பீம்லா மற்றும் மகள்கள் ஜஸ்னூர் (7), அஸ்ரிட் (5) ஆகியோரை கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்டனர்.
இது குறித்து தகவல் அறிந்த பொலிசார் அவர்கள் வீட்டிற்கு சென்ற போது சுக்விந்திர் தூக்கில் தொங்கிய நிலையிலும், மற்ற ஐவரும் படுக்கையிலும் சடலமாக கிடந்தனர்.
tribuneindia
சுக்விந்தர் இறப்பதற்கு முன்னர் எழுதியிருந்த கடிதத்தில் பல்கிஷன் தாகூர் மற்றும் கவி நருலா ஆகிய இருவரும் என்னிடம் ரூ 10 லட்சம் கேட்டு தொந்தரவு செய்தனர், பணத்தை கொடுக்கவில்லை என்றால் குடும்பத்தை துன்புறுத்துவேன் என மிரட்டினார்கள் என எழுதியிருந்தார்.
இதையடுத்து பொலிசார் தற்போது தாகூரை கைது செய்துள்ள நிலையில் கவியை தேடி வருகின்றனர். இருவரும் சுக்விந்தரின் உயர் அதிகாரிகள் ஆவார்கள், கூப்பன் வாங்குவது தொடர்பில் அவர்களுக்கும் சுக்விந்தருக்கும் இடையே பிரச்சனை இருந்து வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.
தொடர்ந்து பொலிசார் இது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
publicapp