ஸ்பெயினில் ஸ்கை லிஃப்ட் விபத்து: 80 பேரை மீட்கும் பணி தீவிரம்
ஸ்பெயினில் ஏற்பட்டுள்ள ஸ்கை லிஃப்ட் விபத்தில் டஜன் கணக்கானோர் காயமடைந்துள்ளனர்.
ஸ்கை லிஃப்ட் விபத்து
ஸ்பெயினின் பிரான்ஸ் எல்லையை ஒட்டியுள்ள பைரனீஸ்(Pyrenees) மலைத்தொடரில் அமைந்துள்ள அஸ்டூன் ரிசார்ட்டில்(Astún resort) உள்ள ஸ்கை லிஃப்ட்-டில் விபத்து ஏற்பட்டு பலர் காயமடைந்துள்ளனர்.
இதில் குறைந்தபட்சம் 30 பேர் காயமடைந்துள்ளனர், இதில் 9 பேர் மிகவும் காயமடைந்துள்ளனர், மேலும் 8 பேர் தீவிர காயங்களுடன் உள்ளதாக பிராந்திய அரசு தெரிவித்துள்ளது.
கேபிள் தளர்ச்சியினால் இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்ற அறிக்கைகளுடன், விபத்தின் போது சவாரி நாற்காலிகள் துள்ளி எழுந்து பயணிகளை தூக்கி ஏறிந்ததாக சாட்சிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
விபத்தில் சிக்கியுள்ள 80 பேர்
பலர் காயமடைந்துள்ள நிலையில், சுமார் 80 பேர் லிஃப்டில் சிக்கியுள்ளனர்.
ஹெலிகாப்டர் உட்பட அவசர மீட்புப் பணியாளர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.
ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ்(Pedro Sánchez) இந்த விபத்தில் அதிர்ச்சியடைந்ததாகவும், காயமடைந்தவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு அனுதாபம் தெரிவித்துக் கொள்வதாகவும் தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |