பாகிஸ்தானில் குண்டுவெடிப்பால் நாடு திரும்ப கேட்ட வீரர்கள்! மறுத்து விளையாடக் கூறிய இலங்கை கிரிக்கெட் நிர்வாகம்
இஸ்லாமாபாத் தாக்குதல் காரணமாக நாடு திரும்ப வீரர்கள் விடுத்த கோரிக்கையை இலங்கை கிரிக்கெட் நிர்வாகம் நிராகரித்துள்ளது.
குண்டுவெடிப்பு
இலங்கை கிரிக்கெட் அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.
இரு அணிகளுக்கும் இடையே இரண்டாவது ஒருநாள் போட்டி நடைபெற உள்ள நிலையில், ராவல்பிண்டி மைதானத்திற்கு அருகிலுள்ள இஸ்லாமாபாத்தில் குண்டு வெடிப்பு நடந்தது. 
இதனால் அதிர்ச்சியடைந்த வீரர்கள் பாதுகாப்பு காரணமாக, மீதமுள்ள போட்டிகளை ரத்து செய்து நாடு திரும்ப கோரிக்கை விடுத்தனர்.
ஆனால், இலங்கை கிரிக்கெட் நிர்வாகம் வீரர்களின் கோரிக்கையை ஏற்க மறுத்துவிட்டது. மேலும், தொடரில் இருந்து பாதியில் வெளியேறக் கூடாது என்றும், விலகினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நிர்வாகம் எச்சரிக்கை விடுத்ததாக செய்தி வெளியாகியுள்ளது.
இதற்கிடையில் குண்டுவெடிப்பு சம்பவத்தையடுத்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இலங்கை வீரர்களுக்கு பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளது.
கடந்த 2009ஆம் ஆண்டில், லாகூரில் இலங்கை வீரர்கள் சென்ற பேருந்து மீது தாக்குதல் நடத்தப்பட்டதில் 6 பேர் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |