கோடிகளில் வருமானம் தரும் மர விவசாயம் - குறைந்த பராமரிப்பில் அதிக லாபமாம்
ஒவ்வொரு வியாபாரத்திலும் முக்கிய நோக்கமாக இருப்பது லாபம் எடுப்பதையாகும். ஒருவர் ஆரம்பிக்கும் வியாபாரமானது நஷ்டத்தில் சென்றால் உடனே அந்த வியாபாரத்தை பலரும் நிறுத்தி விடுவார்கள்.
ஆனால் எப்போதுமே நல்ல லாபத்தை ஈட்டித்தரக்கூடிய வியாபாரம் பற்றி இந்த பதிவில் விரிவாக தெரிந்துக்கொள்வோம்.
கோடிகளில் வருமானம் தரும் மர விவசாயம்
உலகெங்கிலும் சந்தன மரங்களின் தேவையானது இன்று வரையில் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இந்த மரமானது வாசணைக்கு முக்கியத்துவம் பெற்றதாகும்.
சோப்பு முதல் வாசனை திரவியங்களை வரை சந்தன மரங்கள் மூலம் பல்வேறு பொருட்கள் தயாரிக்கப்படுகின்றது. எனவே சந்தன மரத்தை வைத்து ஒரு நல்ல வியாபாரத்தை செய்யலாம்.
சந்தன மரங்கள் நடுவதற்கு இரண்டு முக்கிய வழிகள் உள்ளன.
- இயற்கை விவசாயம்.
- பாரம்பரிய முறைப்படி வளர்த்தல்.
இயற்கை முறையில் சந்தன மரங்களை வளர்க்க 10 முதல் 15 வருடங்கள் ஆகும். அதுவே பாரம்பரிய முறைப்படி வளர்த்தால் 20 முதல் 25 ஆண்டுகள் வரை ஆகும்.
சந்தன மரத்தை வளர்ப்பதற்கு பல ஆண்டுகள் தேவைப்பட்டாலும் இதை பராமரிப்பதற்கான நேரம் மிகக் குறைவாகவே இருக்கும்.
குறைந்த பராமரிப்பு மூலம் நல்ல லாபம் ஈட்டித் தரும் தொழில் என்றால் இதை கூறலாம். இதை வளர்ப்பதன் மூலம் ஆண்டுக்கு 3 முதல் 5 லட்சம் வரை லாபம் பெறலாம்.
5 முதல் 10 சந்தன மரங்களை வளர்த்தால் ஆண்டுக்கு ரூ.30 லட்சம் வரை லாபத்தை பெற முடியும். அதுவே 100 இற்கும் அதிகமாக சந்தன மரத்தை வளர்த்தால் ஆண்டுக்கு ரூ.5 கோடி வரை லாபம் பெறலாம்.
கடந்த 2017 ஆம் ஆண்டு இந்தியாவில் சந்தன மரங்களை தனியார் ஒருவர் விற்பனை செய்வதற்கும் கொள்முதல் செய்வதற்கும் தடை விதிக்கப்பட்டு இருந்தது.
மரத்தை வளர்க்கலாம் ஆனால் அரசாங்கத்திடம் மட்டுமே விற்பனை செய்ய முடியும் என தடை விதிக்கப்பட்டிருந்தது.
மேலும் சந்தன மரங்களை கொள்முதல் செய்வது முதல் விற்பனை செய்வது வரை அனைத்தையும் வனத்துறையிடம் தெரிவிக்க வேண்டும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |