கருகருன்னு நீளமாக கூந்தல் வளர உதவும் சின்ன வெங்காயம்: எப்படி பயன்படுத்துவது?
ஆண், பெண் என அனைவருக்கும் முடி உதிர்தல், வலுவிழந்த முடி, பொடுகு மற்றும் நரை முடி போன்ற பிரச்சனைகள் இருக்கிறது.
இயற்கை முறையில் முடி வளர்ச்சியை அதிகரிக்க சின்ன வெங்காயத்தை எப்படி பயன்படுத்துவது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- சின்ன வெங்காயம்- 10
- தேங்காய் எண்ணெய்- 2 ஸ்பூன்
எப்படி பயன்படுத்துவது?
முதலில் சின்ன வெங்காயத்தை தோலுரித்து, மிக்ஸ்யில் சேர்த்து சிறிதளவு தண்ணீர் சேர்த்து அரைத்து, வடிக்கட்டி சாறை மட்டும் தனியாக எடுக்கவும்.
சின்ன வெங்காய சாறுடன் தேங்காய் எண்ணெய் சேர்த்து நன்கு மிக்ஸ் செய்து லேசாக சூடுப்படுத்தவும்.
இந்த சாறை நேரடியாக தலையில் தடவி 30 நிமிடம் கழித்து தலைக்கு குளிக்கலாம்.
நீளமான கூந்தலுக்கு சின்ன வெங்காயம்
வெங்காயச் சாறு முடி வளர்ச்சியை மேம்படுத்துதல், பொடுகுத் தொல்லையைக் குறைத்தல் மற்றும் முடிக்கு ஊட்டமளிப்பது உள்ளிட்ட பல்வேறு நன்மைகளை கொண்டிருக்கிறது.
சின்ன வெங்காய சாறு, முடி கொட்டிய இடத்தில் புதிய முடி வளர உதவுகிறது.
சின்ன வெங்காய சாற்றில் கந்தகம் உள்ளது. இது கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்க உதவுகிறது, இது முடி வளர்ச்சிக்கு அவசியமான புரதமாகும்.
மேலும், தலைமுடி முன்கூட்டியே நரைப்பதைத் தடுக்கவும், உச்சந்தலையில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்த உதவும் கலவைகள் சின்ன வெங்காயத்தில் உள்ளன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |