ஜேர்மனி: சிறிய நகரங்கள் மகிழ்ச்சி தரவரிசையில் முன்னிலை
ஜேர்மனியின் மகிழ்ச்சி தரவரிசையில் சிறிய நகரங்கள் முன்னிலை பெற்றுள்ளன.
SKL Happiness Atlas ஆய்வின் படி, துரிங்கியா மாநிலத் தலைநகரான எர்ஃபர்ட் (Erfurt), ஜேர்மனியின் மிக மகிழ்ச்சியான நகரமாக தேர்வாகியுள்ளது. கடந்த ஆண்டு 6-வது இடத்தில் இருந்த எர்ஃபர்ட், இப்போது முதலிடத்தை பிடித்துள்ளது.
இதற்கு முன்பாக முதலிடம் பெற்ற காசல் (Kassel) 13வது இடத்திற்கு சரிந்துள்ளது.
ட்யூஸ்ஸெல்டார்ஃப் (Düsseldorf) மூன்றாவது இடத்தில் உள்ளது. பவேரியாவின் ஆக்ஸ்பர்க் (Augsburg), மேற்குக் ஜேர்மனியின் க்ரெஃபெல்ட் (Krefeld) மற்றும் வடக்கு நகரமான கீல் (Kiel) ஆகியவை முதல் ஐந்து இடங்களில் இடம்பெற்றுள்ளன.
பெரிய நகரங்கள் குறைவான மதிப்பெண்களை பெற்றுள்ளன. ஹாம்பர்க் (Hamburg) 10வது இடத்தில் இருந்தாலும், ம்யூனிக் (Munich) 24வது இடத்தில், பெர்லின் (Berlin) 35வது இடத்தில் மட்டுமே உள்ளது.
எர்ஃபர்ட் 10-ல் 7.74 மதிப்பெண்களுடன் முதலிடம் பெற்றுள்ளது. அதேசமயம், வடக்கு துறைமுக நகரமான ரோஸ்டாக் (Rostock) 5.8 மதிப்பெண்களுடன் கடைசியில் உள்ளது.
“பொருளாதார வளம் மட்டுமல்ல, சமூக ஒற்றுமை, சுற்றுச்சூழல் தரம், குறைந்த வாடகை, மக்கள் தங்கள் நகரத்துடன் கொண்டுள்ள அடையாள உணர்வு ஆகியவை மகிழ்ச்சியை அதிகரிக்கின்றன” என்று ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.
மேற்கு ஜேர்மனியின் நகரங்கள் சராசரியாக அதிக மகிழ்ச்சியைப் பெற்றுள்ளன. கிழக்கு நகரங்கள் முன்னேற்றம் கண்டாலும், இன்னும் பின்தங்கியுள்ளன.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |