நடுவானில் பறந்த விமானம்! திடீரென வெடித்து சிதறிய ஸ்மார்ட் போன்...அதன் பின் நடந்த சம்பவம்
சான் பிரான்சிஸ்கோவில் விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது பயணி ஒருவரின் ஸ்மார்ட் போன் எதிர்பாராதவிதமாக வெடித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
அமெரிக்காவில் உள்ள அலாஸ்கா ஏர்லைன்ஸ் விமானம் கடந்த திங்கட் கிழமை மாலை நியூ ஆர்லின்சில் இருந்து சியாட்டை நோக்கி வந்து கொண்டிருந்தது. அப்போது விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது விமானத்தில் பயணம் செய்த ஒருவரின் போன் திடீரென்று தீப்பிடித்து வெடித்து சிதறியுள்ளது.
சாம்சங் கேலக்ஸி ஏ 21 என்ற போனே வெடித்ததாகவும், இதையடுத்து அந்த விமானம் மிக அவசரமாக தரையிறக்கப்பட்டது. ஏறக்குறைய 128 பயணிகள் மற்றும் ஆறு பணியாளர்கள் பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அலாஸ்கா ஏர்லைன்ஸ் கூறியது, விமானத்தின் குழுவினர் பேட்டரி கன்டெய்ன்மென்ட் போன்ற தீயை அணைக்க பயன்படுத்தும் கருவிகளை கொண்டு உடனடியாக தீயை அணைத்துவிட்டனர்.
Earlier this evening, POSFD responded to a report of a fire in the cargo hold of Alaska Airlines Flight 751. Upon arrival, the fire was contained and passengers and crew were evacuated from the aircraft. (1/2) pic.twitter.com/rY2cFgrmUH
— Seattle-Tacoma Intl. Airport (@flySEA) August 24, 2021
இதனால் எந்த பயணிகளுக்கும் காயங்கள் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது வரை இந்த சம்பவம் குறித்து சாம்சங் நிறுவனம் எந்த ஒரு தகவலையும் வெளியிடாததால் வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.