பாம்புடன் விளையாடிய குழந்தையை பதம்பார்த்த நச்சுப்பாம்பு: ஒரு திடுக் வீடியோ
ரஷ்யாவில், விலங்குகளுடன் குழந்தைகளை விளையாட அனுமதிக்கும் உயிரியல் பூங்கா ஒன்றில், குழந்தை ஒன்றின் கன்னத்தை நச்சுப்பாம்பு ஒன்று பதம்பார்த்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ரஷ்யாவில் Sverdlovsk Oblast என்ற இடத்தில் ஒரு உயிரியல் பூங்கா உள்ளது. அதின் சிறப்பம்சம் என்னவென்றால், அங்கிருக்கும் விலங்குகளை மனிதர்கள் தொட்டுப்பார்க்கலாம்.
அப்படி விக்டோரியா என்னும் ஐந்து வயது சிறுமி ஒருத்தி நச்சுப்பாம்பு ஒன்றை தன் கழுத்தைச் சுற்றி விட்டுக்கொண்டு புகைப்படத்துக்கு போஸ் கொடுத்திருக்கிறாள்.
அப்போது, எதிர்பாராத விதமாக அந்த பாம்பு அந்த சிறுமியை கன்னத்தில் கடித்துவிட்டது. பதறிப்போன அவளது பெற்றோர், உடனடியாக விக்டோரியாவை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். சிறுமியின் கன்னத்தை அந்த பாம்பு பதம்பார்க்கும் திடுக் காட்சியை வெளியாகியுள்ள வீடியோவில் காணலாம்.
அந்த உயிரியல் பூங்காவில் இதற்குமுன் இப்படி ஒரு சம்பவம் நிகழ்ந்ததில்லை என்று கூறியுள்ள பூங்கா ஊழியர்கள், விக்டோரியா பூங்காவிற்கு வருவதற்கு முன் கோழிக்கறி சாப்பிட்டிருக்கிறாள் என்று, அந்த பாம்புடன் விளையாடுவதற்கு முன் கோழிகளுடன் விளையாடிக்கொண்டிருந்திருக்கிறாள் என்றும், ஆகவே, கோழியின் வாசனை அடித்ததாலேயே அந்த பாம்பு அவளைக் கடித்திருக்கலாம் என்றும் கூறியுள்ளார்கள்.
விக்டோரியாவைக் கடித்த அந்த பாம்பு, hook-snouted rufous beaked snake என்னும் வகையைச் சேர்ந்த குறைந்த நச்சுத்தன்மையுடைய பாம்பு என்று கூறப்படுகிறது. தன் கன்னத்தில் பாம்பு கடித்த இடத்தில் பேண்டேஜ் போட்டிருப்பதை விக்டோரியா காட்டுவதை வெளியாகியுள்ள படங்களில் ஒன்றில் காணலாம்.