Amazon -ல் Xbox ஓர்டர் செய்தவருக்கு பாம்பு டெலிவரி.., ஸ்டிக்கர் இருந்ததால் அசம்பாவிதம் தவிர்ப்பு
Amazon தளத்தில் Xbox ஓர்டர் செய்தவருக்கு பாம்பை டெலிவரி செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Amazon -ல் ஓர்டர்
அமேசான் தளத்தில் பெங்களூரூவைச் சேர்ந்த தம்பதியினர் எக்ஸ் பாக்ஸ் எனப்படும் விளையாட்டு சாதனம் ஒன்றை ஓர்டர் செய்தனர். அவர்களுக்கு அந்த பொருளானது நேற்று மாலை டெலிவரி செய்யப்பட்டது.
அந்த தம்பதியினர் பெட்டியை வாங்கிய போது பாம்பு போன்ற ஒன்று நெளிவதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். பின்னர், அந்த பெட்டியை ஓரமாக வைத்து பாம்பு தான் என்பதை உறுதி செய்தனர்.
நல்வாய்ப்பாக அந்த பாம்பு பெட்டியில் ஒட்டப்பட்டிருந்த ஸ்டிக்கரில் சிக்கி நகர முடியாமல் இருந்தது. இதனால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
இதுதொடர்பாக அமேசான் நிறுவனத்திற்கு தொடர்பு கொண்ட போது உரிய பதிலளிக்காமல் இரண்டு மணி நேரத்திற்கு மேல் அலைக்கழித்ததாக கூறப்படுகிறது.
பின்னர், பாம்பு பிடிப்பவர்கள் வரவழைக்கப்பட்டு பத்திரமாக மீட்கப்பட்டது. இதையடுத்து, அமேசான் நிறுவனத்தில் புகார் அளித்ததன்படி பணத்தை திரும்ப தருவதாக நிறுவனம் கூறியுள்ளதாக கூறப்படுகிறது.
ஆனால், இதற்கு வருத்தம் தெரிவிக்கவும், அல்லது அவர்களுக்கு இழப்பீடு வழங்கவும் அமேசான் நிறுவனம் எவ்விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தம்பதியினர் குற்றம் சாட்டியுள்ளனர்.
இதனால், யாருக்காவது அசம்பாவிதம் ஏற்பட்டிருந்தால் யார் பொறுப்பேற்பது எனவும் கேள்வி எழுப்பியுள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |