நடுவானில் நடந்த திகில் சம்பவம்.. ஜன்னலில் இருந்து எட்டி பார்த்த ராஜ நாகம்! பதறிப்போன விமானி செய்த காரியம்
மலேசியாவில் வானில் பறந்து கொண்டிருந்த விமானத்தில் பாம்பு ஒன்று இருந்ததையடுத்து அந்த விமானம் உடனே தரையிறக்கப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மலேசியாவில் இருந்து பயணிகளை ஏற்றி கொண்டு ஏர் ஆசியா விமானம் ஒன்று கோலாலம்பூரை நோக்கி சென்றது. அப்போது பயணிகள் அமரும் இருக்கைக்கு மேல் உள்ள பகுதியில் ஒரு பாம்பு ஊர்ந்து சென்றுள்ளது.
இதனால் பயணிகளிடையே பெரும் பரபரப்பை ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து தாவாவில் தரையிறங்க வேண்டிய அந்த விமானம், புறப்பட்டு சில மணி நேரத்திலேயே பயணிகளின் பாதுகாப்பு கருதி கூச்சிங்கில் அவசரமாகத் தரையிறக்கப்பட்டது.
இந்த சம்பவம் குறித்து ஏர் ஏசியா நிறுவனத்தின் தலைமை பாதுகாப்பு அதிகாரி லியாங் டைன் லிங் கூறியதாவது, பயணிகளின் பாதுகாப்பைப் கருதி சாபாவின் தவாவ் நகருக்கு செல்ல வேண்டிய விமானம் கூச்சிங்குக்கு திசை திருப்பட்டதாக கூறியுள்ளார்.
மேலும் பயணிகளுக்கு எந்த ஆபத்தும் ஏற்படவில்லை என்றும் கூடிய விரைவில் விமானம் தாவாவிற்குப் புறப்படும் என்றும் கூறியுள்ளார். விமானத்திற்குள் அழையா விருந்தாளியாக பாம்பு ஒன்று பயணம் செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.