பிரித்தானியாவில் கடும் பனிப்பொழிவு எச்சரிக்கை: மெட் அலுவலகம் விடுத்த பாதுகாப்பு எச்சரிக்கை
பிரித்தானியாவின் பெரும் பகுதிகளுக்கு பனிப்பொழிவு மற்றும் உறைபனி குறித்த எச்சரிக்கையை மெட் அலுவலகம் வெளியிட்டுள்ளது.
மெட் அலுவலகம் எச்சரிக்கை
பிரித்தானியாவின் பெரும்பாலான பகுதிகளுக்கு பனிப்பொழிவு மற்றும் உறைபனி குறித்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அதிக கவனமுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வெள்ளிக்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை வேல்ஸ் மற்றும் பிரித்தானியாவின் பல பகுதிகளில் இந்த உறைபனி எச்சரிக்கை நடைமுறையில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சனிக்கிழமை மட்டும் வடக்கு இங்கிலாந்து மற்றும் ஸ்காட்லாந்து பகுதிகளில் இரவு 9 மணி முதல் கடும் பனிப்பொழிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மருத்துவ மற்றும் பாதுகாப்பு எச்சரிக்கை
கடுமையான குளிரை கருத்தில் கொண்டு முதியவர்கள் மற்றும் நீண்ட நாள் உடல்நலக் குறைபாடு கொண்டுள்ள மக்கள் கூடுதல் கவனமுடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பனிப்பொழிவு காரணமாக சாலைகள் வழுக்க கூடும் மற்றும் பார்வைத்திறன் குறைபாடு ஆகிய ஆபத்துகள் ஏற்படும் எனவே உள்ளூர் சாலை நிலவரங்களை சரிபார்த்துவிட்டு வெளியே பயணங்களை மேற்கொள்ளுமாறு அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |