பனி சரிந்து விழுந்ததில் உயிருடன் புதைந்து மரணம்: அவசரநிலை அறிவிப்பு
ரஷ்யாவின் தூர கிழக்குப் பகுதியில் பனி சரிந்து விழுந்து இருவர் உயிருடன் புதையுண்டனர்.
பனிப்பொழிவு
ரஷ்யாவின் Okhotsk கடற்பகுதியில் உருவான பல புயல்கள், Kamchatla மற்றும் தூர கிழக்கு பகுதிகளின் மற்ற பகுதிகளைத் தாக்கி பலத்த காற்றையும் சாதனை அளவிலான பனிப்பொழிவையும் ஏற்படுத்தியுள்ளன.
Photo: kamtoday.ru
சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து திடீரென புறப்பட்ட 4 விண்வெளி வீரர்கள்: பரபரப்பை உருவாக்கியுள்ள செய்தி
பெட்ரோபாவ்லோவ்ஸ்க் - காம்சாட்ஸ்கி நகரில் கூரைகளில் இருந்து பனி சரிந்து விழுந்தது. இதில் இருவர் உயிருடன் புதைக்கப்பட்டதில் இறந்ததாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும், தொடர்ச்சியான சக்தி வாய்ந்த குளிர்காலப் புயல்களால் காம்சட்கா தீபகற்பம் பெருமளவில் முடங்கியுள்ளது.
அவசரநிலை
இதனையடுத்து முதல் மரணம் பதிவான சிறிது நேரத்திலேயே, பெட்ரோபாவ்லோவ்ஸ்க் - காம்சாட்ஸ்கி நகர மேயர் யெவ்ஜெனி பெல்யாயெவ் நகரம் முழுவதும் அவசரநிலையை அறிவித்தார்.
இதனால், அவசரகால பனி அகற்றும் பணிகளுக்காகக் கூடுதல் வளங்களைத் திரட்டும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
குற்றவியல் விசாரணை தொடங்கியுள்ளதாக ரஷ்யாவின் புலனாய்வுக் குழுவின் பிராந்தியக் கிளை தெரிவித்துள்ளது.
Photo: Ulyana Pamsheva/TASS| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |