வெறும் 50 ரூபாயுடன் இந்தியாவை விட்டு வெளியேறியவர்., இன்று ரூ.17,000 கோடிக்கு சொந்தக்காரர்
வாழ்க்கையில் சாதிக்க வேண்டும் என்ற மனம் இருந்தால் முடியாதது எதுவுமில்லை என்பதை பல சாதனையாளர்கள் ஏற்கனவே நிரூபித்துள்ளனர்.
பூஜ்ஜியத்தில் இருந்து ஆரம்பித்து மிகப்பாரிய சாம்ராஜ்யத்தை கட்டியவர்களும் உண்டு.
இந்த ஒற்றை விமானம் ரூ.16,000 கோடி., உலகின் மிக விலையுயர்ந்த Private Jet வைத்திருக்கும் கோடீஸ்வர இளவரசர்
வறுமையில் வாடி, உணவின்றி நாட்களைக் கழித்தவர்கள் பலர் தொழில் செய்து இன்று கோடீஸ்வரர்களாக மாறியுள்ளனர். அப்படிப்பட்ட தொழிலதிபர்களில் பிஎன்சி மேனனும் ஒருவர்.
தொழிலதிபர் பிஎன்சி மேனன்
75 வயதான பிஎன்சி மேனன் (PNC Menon) உலகின் பணக்கார NRIகளில் ஒருவர்.
எளிமையான குடும்பத்தில் பிறந்த பிஎன்சி மேனன் 10 வயதிலேயே தந்தையை இழந்தார்.
இப்படியொரு சூழலில், நிதிப் பிரச்னையால் கல்லூரி படிப்பை பாதியில் நிறுத்திய மேனன், 50 ரூபாய்க்கு வந்த 7 டொலர்களை மட்டும் பாக்கெட்டில் வைத்துக்கொண்டு இந்தியாவை விட்டு வெளியேறினார்.
சுருக்கமாக PNC மேனன் என்று அழைக்கப்படும் புத்தன் நெடுவாக்கட் செந்தமராக்ஷா மேனன் (Puthan Naduvakkatt Chenthamaraksha Menon), Shoba Groupsன் நிறுவனர் ஆவார்.
அவரது வணிக சாம்ராஜ்யம் இந்தியா, மத்திய கிழக்கு மற்றும் பிரித்தானியா வரை பரவியுள்ளது.
இந்தியாவின் கேரள மாநிலத்தைச் சேர்ந்த மேனன், தொழில்முனைவோராக வேண்டும் என்ற தனது கனவைத் தொடர திருச்சூரில் உள்ள கேரள வர்மா கல்லூரியில் படிப்பை கைவிட முடிவு செய்தார். அவனது கல்வி அங்கேயே முடிந்தது. அதன் பிறகு Interior Designing தொழிலை தொடங்கினார்.
1976-ல், மேனன் Oman நாட்டின் மஸ்கட் சென்றார். 1977ல் ரூ.75,000 கடனுடன் தனது முதல் நிறுவனமான S&T Interiors and Contractingகை நிறுவினார். 1984 வாக்கில், இந்த வணிகம் நாட்டில் நன்கு நிறுவப்பட்ட சிறந்த நிறுவனமாக தன்னை நிலைநிறுத்திக் கொண்டது.
1990களில் ரியல் எஸ்டேட் மற்றும் கட்டுமானத் துறையின் திறனை அவர் அங்கீகரித்தபோது மேனனின் வணிகம் ஒரு பாரிய திருப்பத்தை எடுத்தது.
இந்தியாவில் தனது அடுத்த முயற்சியைத் தொடங்க முடிவு செய்த அவர், 1995-ல் Sobha Developersஐ நிறுவினார். மத்திய கிழக்கில் Sobha Realty நிறுவனத்தையும் வைத்திருக்கிறார். ஓமனில் உள்ள Al Bustan Palace மற்றும் Sultan Qaboos Grand Mosque போன்ற முக்கிய கட்டிடங்களின் உட்புறங்களை மேனன் வடிவமைத்துள்ளார்.
பிஎன்சி மேனன் 2009ல் இந்திய ஜனாதிபதியிடமிருந்து Pravasi Bharatiya Samman Puraskar விருதையும் பெற்றார். இவரது ஷோபா ரியாலிட்டி வளைகுடாவில் பட்டியலிடப்படாத ரியல் எஸ்டேட் நிறுவனங்களில் முதன்மையானது.
Forbes இணையத்தளத்தின்படி, இன்று அவர் சுமார் 17,500 கோடி ($2.1 பில்லியன்) சொத்து மதிப்பைக் கொண்டுள்ளார்.
108 வயதான சிறுநீரகத்துடன் வாழும் பிரித்தானிய பெண்., 50 ஆண்டுகள் கடந்தும் ஆரோக்கியமாக இருக்கும் ஆச்சரியம்
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |
pnc menon sobha group, Sobha Limited, Sobha Reality, PNC Menon Net Worth, sobha PNC Menon, Forbes, Successful Indian Businessman