1000 வீரர்களின் உடல்களை ஒப்படைத்த ரஷ்யா: பதிலுக்கு உக்ரைன் எடுத்த நடவடிக்கை
போரில் உயிரிழந்த வீரர்களின் உடல்களை உக்ரைன் மற்றும் ரஷ்யா பரிமாற்றம் செய்துள்ளன.
உடல்கள் பரிமாற்றம்
உக்ரைன் மற்றும் ரஷ்யா ஆகிய இரண்டு போர் நாடுகளும் சமீபத்தில் உயிரிழந்த இராணுவ வீரர்களின் உடல்களை பரிமாற்றம் செய்துள்ளன.
உக்ரைனிய அதிகாரிகள் மற்றும் ரஷ்ய அரசு ஊடகங்கள் இந்த தகவலை வியாழக்கிழமை உறுதிப்படுத்தியுள்ளன.

ரஷ்யாவின் தரப்பில் இருந்து கிட்டத்தட்ட 1000 வீரர்களின் உடல்கள் உக்ரைனிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
ஆனால், அதே சமயம் உக்ரைன் தரப்பில் இருந்து வெறும் 30 வீரர்கள் உடல் மட்டுமே ரஷ்யாவிடம் ஒப்படைக்கப்பட்டு இருப்பதாக ரஷ்ய அரசு ஊடகம் பெயர் வெளியிடாத நபரை மேற்கோள் காட்டி தெரிவித்துள்ளது.
இந்நிலையில் உக்ரைனுக்கு கொண்டு வரப்பட்டுள்ள 1000க்கும் மேற்பட்ட உடல்களை அடையாளம் காணும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.
இந்த வீரர்கள் உடல் பரிமாற்றமானது இருநாடுகளுக்கு இடையிலான தொடர்ச்சியான போர் நிறுத்த பேச்சுவார்த்தை முயற்சிகளுக்கு மத்தியில் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |