பாகிஸ்தானில் 15 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை! பாதுகாப்புப் படையினர் அதிரடி
பாகிஸ்தானில் பாதுகாப்புப் படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையேயான சண்டையில் 15 பேர் கொல்லப்பட்டனர்.
பயங்கரவாத அமைப்புகள்
பலூசிஸ்தான் கிளர்ச்சிப்படை, தெக்ரிக் ஐ தலிபான் உட்பட பல்வேறு பயங்கரவாத அமைப்புகள் பாகிஸ்தானில் செயல்பட்டு வருகின்றன.
காஷ்மீரில் நடந்த தாக்குதல்களுக்கு TRF என்ற அமைப்பு பொறுப்பேற்றது. அதனைத் தொடர்ந்து பாகிஸ்தானியர்களை வெளியேற்றும் நடவடிக்கையில் இந்தியா ஈடுபட்டது.
இந்த நிலையில், பாகிஸ்தானின் வடக்கு வசிர்ஸ்தான் மற்றும் கரக் ஆகிய பகுதிகளில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்புப் படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
15 பயங்கரவாதிகள்
உடனே பாதுகாப்புப் படையினர் அங்கு விரைந்து தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது மறைந்திருந்த பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்த, பாதுகாப்புப் படையினரும் பதில் தாக்குதல் நடத்தினர்.
இதில் 15 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். மேலும் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த இருவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |