வெள்ளைக் கொடியுடன் உக்ரைனிடம் சரணடையும் ரஷ்ய வீரர்கள்: புடினுக்கு மேலும் தலைக்குனிவு
ரஷ்யப் படையினர் வெள்ளைக்கொடியுடன் உக்ரைன் வீரர்களிடம் சரணடையும் காட்சிகள் வெளியாகி வருகின்றன.
அதனால் எரிச்சலடைந்துள்ள புடின், அணு ஆயுதம் ஒன்றை வெடிக்கச் செய்யலாம் என்ற அச்சம் உருவாகியுள்ளது.
தான் உக்ரைனின் நான்கு நகரங்களை ரஷ்யாவுடன் இணைத்துவிட்டதாக புடின் பெருமையடித்துக்கொண்டிருக்கும் நிலையில், அவரது படைவீரர்கள் அவருக்கு மேலும் ஒரு தலைக்குனிவை ஏற்படுத்தும் செயலைச் செய்துள்ளார்கள்.
ரஷ்ய ஜனாதிபதியாகிய புடின், உக்ரைனிலுள்ள Donetsk, Luhansk, Kherson மற்றும் Zaporizhzhia ஆகிய பகுதிகளை ரஷ்யாவுடன் இணைத்துவிட்டதாக பெருமையடித்துக்கொண்டிருக்கிறார்.
ஆனால்,அவரது படைவீரர்களோ வெள்ளைக் கொடியுடன் உக்ரைன் வீரர்களிடம் சரணடைந்துகொண்டிருக்கிறார்கள்.
சமீபத்தில், Kherson பகுதிக்கு அருகிலேயே, இராணுவ வாகனம் ஒன்றில் வந்த ரஷ்யப் படையினர் சிலர், வெள்ளைக்கொடியுடன் உக்ரைன் வீரர்களிடம் சரணடையும் காட்சி ஒன்று வெளியாகியுள்ளது.
உக்ரைன் வீரர்களை நோக்கி வந்த அந்த ரஷ்ய இராணுவ வாகனத்திலிருந்து கைகளை உயர்த்தியபடி வெளியே வரும் ரஷ்யப் படையினர், உக்ரைன் வீரர்களிடம் சரணடைவதைக் காணலாம்.
இந்நிலையில், ஏற்கனவே அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் ரஷ்ய ரயில் ஒன்று உக்ரைனை நோக்கி வரும் காட்சிகளும், அணு ஆயுதம் தாங்கிய நீர்மூழ்கிக்கப்பல் ஒன்று ஆர்டிக் சமுத்திரத்தில் நிற்கும் காட்சிகளும் வெளியாகியுள்ளன.
ஆக, இப்படி ரஷ்யாவுக்கு தலைக்குனிவை ஏற்படுத்தும் வகையில் ரஷ்யப் படையினர் சரணடைந்து வருவதுடன், உக்ரைன் படைகளும் வேகமாக முன்னேறி வருவதால், எச்சரிக்கை விடுக்கும் வகையில் எல்லையில் புடின் அணு ஆயுதம் ஒன்றை வெடிக்கச் செய்யக்கூடும் என்ற அச்சம் உருவாகியுள்ளது.
Credit: Reuters
Credit: AFP
Credit: Getty