உறைந்த ஏரியில் விழுந்து பலியான சிறுவர்கள் யார் யார்? புகைப்படத்துடன் வெளியான கலங்க வைக்கும் பின்னணி
பிரித்தானியாவில் சோலிஹல் பகுதியில் உறைந்த ஏரியில் விழுந்து பலியான நான்கு சிறுவர்களும் ஒரே குடும்பத்தினர் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
நெஞ்சைப் பிசையும் சம்பவம்
குறித்த சிறுவர்களின் புகைப்படம், பெயர் மற்றும் தகவல்களை வெளியிட்டு, குடும்பத்தினர் இன்று அஞ்சலி செலுத்தியுள்ளனர். 8 வயதான Finlay Butler, இவரது சகோதரரான 6 வயது சாமுவேல், இவர்களின் உறவினர் 11 வயது தாமஸ் ஸ்டீவர்ட் மற்றும் இவர்களின் நண்பன் 10 வயது ஜாக் ஜான்சன் ஆகியோரே அந்த சிறுவர்கள்.
@PA
வெஸ்ட் மிட்லாண்ட்ஸ் பொலிசார் தற்போது தொடர்புடைய சிறார்களின் புகைப்படங்களை வெளியிட்டுள்ளதுடன், உறவினர்கள் விடுத்த துயரக் குறிப்பையும் பகிர்ந்துள்ளனர்.
பின்லே மற்றும் சாமுவேலின் பெற்றோர் தெரிவிக்கையில், அத்தகைய துயரமான சூழ்நிலையில் தங்கள் மூன்று பிள்ளைகளும் மரணமடைந்துள்ளது நெஞ்சைப் பிசையும் சம்பவம் என குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், சிறுவர்களை மீட்பதில் அவசர சேவை உறுப்பினர்கள் முன்னெடுத்த அனைத்து நடவடிக்கைகளுக்கும், அவர்களுக்கு ஆதரவளித்த பொதுமக்களுக்கும் நன்றி தெரிவிக்க விரும்புகிறோம் என தெரிவித்துள்ளனர்.
இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்
மட்டுமின்றி, இந்த தருணத்தில் சிறுவன் ஜாக் ஜான்சன் குடும்பத்தினருக்கும் மொத்த குடும்பத்தின் சார்பாக இரங்கலை தெரிவித்துக் கொள்வதுடன், எங்கள் பிள்ளைகளை காப்பாற்ற ஒரு நண்பனாக களமிறங்கி உயிரை மாய்த்துக்கொண்டுள்ளான் என குறிப்பிட்டுள்ளனர்.
டிசம்பர் 11ம் திகதி ஞாயிறன்று, சிறார்கள் சிலர் ஏரியை சுற்றியுள்ள பூங்காவில் விளையாடிக்கொண்டிருந்தனர். திடீரென்று ஆபத்தை உணராமல், அவர்கள் உறைந்துபோன ஏரியின் மீது பனிச்சறுக்கு விளையாடியுள்ளனர்.
Image: Rowan Griffiths
இந்த நிலையில், எதிர்பாராதவிதமாக நால்வர் அதில் தவறிவிழ, அதில் ஒரு சிறுவனின் தந்தை சிறுவர்களை காப்பாற்ற ஏரியில் குதிக்க, இதனிடையே அவசர உதவிக்குழுவினர் தகவல் அறிந்து விரைந்து வந்து அனைவரையும் போராடி மீட்டுள்ளனர்.
ஆனால் சிறுவர்கள் மூவருக்கு அப்போது மாரடைப்பு ஏற்பட்டதாகவும் கூறப்பட்டது, மீட்கப்பட்ட நான்கு சிறார்களும் ஆபத்தான கட்டத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். இதில் மூன்று சிறுவர்கள் சிகிச்சை பலனின்றி மரணமடைய, சிறுவன் சாமுவேல் நேற்று மரணமடைந்துள்ளார்.
Image: Rowan Griffiths