UPSC தேர்வுக்கு தயாராகி கொண்டிருந்தவர்.., தாய்க்கு கொடுத்த மாம்பழ ஐடியாவால் அடித்தது அதிர்ஷ்டம்
தனது தாய்க்கு மகன் ஒருவர் புதுவித ஐடியாவை கொடுத்து அவரை லட்சங்களில் வருமானம் பார்க்க செய்துள்ளார்.
லட்சத்தில் வருமானம்
இந்திய மாநிலமான தெலங்கானா, போகர் தாலுகாவில் உள்ள போசி கிராமத்தை சேர்ந்த பெண் விவசாயி சுமன்பாய். இவர், தன்னுடைய மகன் நந்த கிஷோரின் உதவியால் விலையுயர்ந்த மியாசாகி மாம்பழங்களை விளைவித்து வருகிறார்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சுமன்பாய்க்கு அவரது மகன் மியாசாகி நாற்றுகளை பரிசாக கொடுத்துள்ளார்.

6 -ம் வகுப்பில் தோல்வி.., பயிற்சி இல்லாமல் முதல் முயற்சியிலேயே UPSC தேர்வில் தேர்ச்சி பெற்ற IAS அதிகாரி
2020-ம் ஆண்டில் UPSC தேர்வுக்கு நந்தகிஷோர் தயாராகிக் கொண்டிருந்தார். அப்போது, ஊரடங்கு போடப்பட்டதால் அவருடைய பயிற்சி மையம் மூடப்பட்டது. இதனால் அவர் சொந்த ஊருக்கே திரும்பி வந்தார்.
பின்னர், அவர் இணையத்தில் ஒரு நாள் உலகளவில் மிகவும் விலை உயர்ந்த பழங்களில் ஒன்றாக அறியப்படும் மியாசாகி மாம்பழங்களை பார்த்தார்.
அதனை பற்றி தெரிந்து கொள்வதற்காக மேற்குவங்கம், ஜார்கண்ட் ,மத்திய பிரதேசம், டெல்லி, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களுக்கு சென்றார்.
இந்த வணிகத்தை தனது தாய்க்கு அறிமுகப்படுத்துவதற்காக பிலிப்பைன்ஸிலிருந்து 10 மியாசாகி மரக்கன்றுகளை ஓன்லைன் மூலம் ஓர்டர் செய்தார். ஒவ்வொரு செடியின் விலை ரூ.6500 ஆகும்.
பின்னர், 2 ஆண்டுகள் கழித்து பழங்களை கொடுக்க ஆரம்பித்தன. தற்போது, 11 முதல் 12 மாம்பழங்களை விளைவித்துள்ளன.
விவசாயி ஒருவரின் வழிகாட்டுதலின் படி ஒரு மாம்பழத்தின் விலையை ரூ.10,000 ஆக நிர்ணயிக்க முடிவு செய்தார். இந்த விலையுயர்ந்த மாம்பழத்தில் தரம், ஊட்டச்சத்து போன்றவை அதிகம் இருப்பதால் பெரும் தேவையாக உள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |