அம்மாவை அடிக்காதீங்க! தாயை தாக்கிய தந்தையை பலமுறை கத்தியால் குத்திக் கொன்ற 19 வயது இளைஞர்
இந்திய மாநிலம் மகாராஷ்டிராவில் தாயை தாக்கிய தந்தையை, மகனே கத்தியால் குத்திக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
தாயை தாக்கிய தந்தை
மகாராஷ்டிரா தானே மாவட்டத்தில் உள்ள அம்பர்நாத் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஷ் வர்மா. இவரது மகன் பிரகாஷ். ஞாயிற்றுக்கிழமை அன்று ராஜேஷ் வர்மா தனது மனைவியை தாக்கியுள்ளார்.
இதனைப் பார்த்த மகன் பிரகாஷ், தாயை தாக்க வேண்டாம் என்று கூறியுள்ளார். ஆனால், மகனின் பேச்சை பொருட்படுத்தாமல் ராஜேஷ் வர்மா தொடர்ந்து மனைவியை அடித்து துன்புறுத்தியுள்ளார்.
Representational image
தந்தையை குத்திக் கொன்ற இளைஞர்
இதனால் ஆத்திரமடைந்த பிரகாஷ் கூர்மையான கத்தி ஒன்றை எடுத்து வந்து, தன் தந்தையை பலமுறை மூர்க்கமாக குத்தியுள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த அவரை பிற குடும்ப உறுப்பினர்கள் உள்ளூர் மருத்துவமனைக்கு உடனடியாக கொண்டு சென்றனர்.
அங்கு ராஜேஷை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த பொலிஸார் கொலை செய்த பிரகாஷை கைது செய்தனர்.
அவர் மீது சம்பந்தப்பட்ட ஐ.பி.சி பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்த பொலிஸார், இச்சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.