தாயை வெட்டிக் கொன்றுவிட்டு பாட்டு பாடிக்கொண்டு அமர்ந்திருந்த மகன்
இந்தியாவின் சத்தீஸ்கர் மாநிலத்தில், தன் தாயை கோடரியால் வெட்டிக் கொன்றுவிட்டு, அவருக்கு அருகில் உட்கார்ந்து பாட்டு பாடிக்கொண்டிருந்த ஒருவரை பொலிசார் கைது செய்துள்ளார்கள்.
தாயை வெட்டிக் கொன்ற மகன்
நேற்று அதிகாலை, 5.00 மணியளவில், சத்தீஸ்கரிலுள்ள Kunkuri என்னுமிடத்தில் வாழும் ஜீத்ராம் யாதவ் என்பவர், தன் தாயை கோடரியால் மீண்டும் மீண்டும் தாக்கிக் கொன்றுள்ளார்.
சத்தம் கேட்டும், உறவினர்கள் அங்கு செல்ல, அவர்களையும் கோடரியைக் காட்டி மிரட்டியுள்ளார் ஜீத்ராம்.
தாயின் உடலருகே அமர்ந்து அவர் பாட்டுப் பாடிக்கொண்டிருப்பதைக் கண்ட அக்கம்பக்கதிலுள்ளவர்கள் பொலிசாருக்கு தகவல் கொடுக்க, பொலிசார் வரும்போது, ஜீத்ராமை வேடிக்கை பார்க்க அந்த கிராமமே அவரது வீட்டின் முன் கூடியிருந்திருக்கிறது.
பொலிசாராலும் உடனடியாக ஜீத்ராமை நெருங்க முடியவில்லையாம். நான்கு மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தி, பொலிசார் குழுக்களாக கூடி திட்டமிட்டு பிறகு ஜீத்ராமை மடக்கிப் பிடித்து கைது செய்துள்ளார்கள்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக ஜீத்ராமுக்கு மன நல பாதிப்பு இருந்துவந்ததாகவும், நிலைமை மோசமாகிக்கொண்டே வந்ததாகவும் அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளார்கள்.
என்றாலும், எதற்காக தன் தாயை கோடரியால் வெட்டிக்கொல்லுமளவிற்கு ஜீத்ராம் சென்றார் என்பதை அறியும் முயற்சியில் பொலிசார் இறங்கியுள்ளார்கள்.
இதே ஊரில், ஏப்ரல் மாதம் ஒரு 15 வயது சிறுமி தன் தந்தையை கோடரியால் வெட்டிக் கொன்றார்.
தன் தந்தை குடித்துவிட்டு தன்னுடனும் தன் தாயுடனும் சண்டை போடுவதையே வழக்கமாக்கிக்கொண்டதால் அவரைக் கொலை செய்ததாக அந்தச் சிறுமி கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |