ஆட்டோ ரிக்ஷா ஓட்டுநரின் மகன்.., 21 வயதில் UPSC தேர்வில் தேர்ச்சி பெற்று சாதனை
21 வயதில் நாட்டின் கடினமான தேர்வுகளில் ஒன்றான UPSC தேர்வில் தேர்ச்சி பெற்ற இளம் ஐஏஎஸ் அதிகாரியை பற்றி பார்க்கலாம்.
யார் அவர்?
யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் (UPSC) தேர்வு இந்தியாவின் மிகக் கடினமான போட்டித் தேர்வுகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இந்தப் போட்டித் தேர்வில் தேர்ச்சி பெற பல மணி நேரம் படிக்கிறார்கள்.
அந்தவகையியல் ஐஏஎஸ் அதிகாரி அன்சார் ஷேக், 21 வயதில் நாட்டின் கடினமான தேர்வுகளில் ஒன்றாகக் கருதப்படும் யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார்.
மகாராஷ்டிராவின் ஜல்னாவைச் சேர்ந்தவர் அன்சார் ஷேக். இவரது தந்தை யோனஸ் ஷேக் அகமது ஒரு ஆட்டோ ரிக்ஷா ஓட்டுநர் ஆவார். அவரது தாயார் அதீலா ஷேக் வயல்களில் வேலை செய்து வந்தார்.
சிறுவயதிலிருந்தே அன்சார் ஷேக் தனது குடும்பம், வாழ்க்கையை நடத்துவதற்கு சிரமப்படுவதை பார்த்தார். அவரது தம்பி, பள்ளியை பாதியில் நிறுத்திவிட்டு, ஒரு கேரேஜில் வேலை செய்யத் தொடங்கினார். அவரது சம்பளமானது, அன்சாரின் கல்விக்கு உதவியது.
இத்தனை கஷ்டங்கள் இருந்தபோதிலும், அன்சார் கடினமாகப் படித்து கல்வியில் சிறந்து விளங்கினார். இவர், 12 ஆம் வகுப்பில் 91 சதவீத மதிப்பெண்களைப் பெற்றார்.
மேலும் புனேவின் பெர்குசன் கல்லூரியில் 73 சதவீத மதிப்பெண்களுடன் அரசியல் அறிவியலில் இளங்கலைப் படிப்பைத் தொடர்ந்தார். இதன் பிறகு, அவர் UPSC தயாரிப்புகளில் ஈடுபட்டார்.
மூன்று வருட கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்புடன், அன்சார் இறுதியாக 2016 இல் UPSC தேர்வில் அகில இந்திய ரேங்க் (AIR) 361 உடன் தேர்ச்சி பெற்றார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |