சிகிச்சைக்கு பணம் தராமல் தினமும் குடித்துவிட்டு வந்த மகன்: பாரமாக இருக்கிறோம் என பெற்றோர் எடுத்த முடிவு
தமிழக மாவட்டம், நாமக்கல்லில் சிகிச்சைக்கு பணம் தராமல் குடித்துவிட்டு மகன் வருவதால், மனமுடைந்த பெற்றோர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சிகிச்சைக்கு பணம் கொடுக்கவில்லை
நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டி அடுத்துள்ள வரகூர் தாட்கோ காலனியைச் சேர்ந்த தம்பதியினர் பெரியசாமி (55) மற்றும் சாந்தா (52). இதில், பெரியசாமி கூலித்தொழிலாளியாக இருந்து வந்தார். இவர்களுக்கு, கண்ணதாசன் (28) என்ற மகனும், புனிதா என்ற மகளும் உள்ளனர்.
இந்நிலையில், பெரியசாமியும், சாந்தாவும் உடல்நிலை பாதிக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. அதனால், இவர்கள் இருவருக்கும் மாதத்திற்கு ஏற்படும் மருத்துவ செலவு அதிகளவில் உள்ளது.
இதில், இவர்களுடைய மகன் கண்ணதாசன் பெயின்ட் அடிக்கும் தொழிலில் ஈடுபட்டு வருகிறார். ஆனால், இவர் தினமும் வீட்டுக்கு மது அருந்திவிட்டு வந்துள்ளார். பெற்றோரின் மருத்துவ செலவுக்கும், குடும்ப செலவுக்கும் பணம் கொடுக்காமல் இருந்துள்ளதாக கூறப்படுகிறது.
தற்கொலை
இதனால், மகனுக்கு பாரமாக இருக்கிறோம் என கருதிய பெரியசாமி மற்றும் சாந்தா தற்கொலை செய்துகொள்ள முடிவெடுத்தனர். இதனால், கண்ணதாசன் வெளியே போன நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர்.
இந்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த எருமப்பட்டி காவல்நிலைய பொலிசார் இருவரின் உடலை மீட்டு நாமக்கல் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |