இஸ்ரேல்-ஹமாஸ் போா் வாக்கெடுப்பு : இந்தியா பங்கேற்காததற்கு சோனியா காந்தி கண்டனம்!
இஸ்ரேல் ராணுவம் மற்றும் காசாவின் ஹமாஸ் ஆயுதக் குழுவினர் இடையே நீடித்து போரை உடனடியாகப் நிறுத்துவது தொடர்பில் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் இந்தியா பங்கேற்காமை தண்டிக்கத்தக்கது என காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.
கண்டனம் தெரிவித்த சோனியா காந்தி
இந்த தீர்மானத்துக்கு ஆதரவாக 120 நாடுகள் வாக்களித்த நிலையில், 14 நாடுகள் எதிர்ப்பு தெரிவித்திருந்ததோடு, இந்தியா உள்ளிட்ட 45 நாடுகள் வாக்கெடுப்பில் பங்கேற்காமல் நடுநிலை வகித்திருந்தது.
இந்த நிலையில், இஸ்ரேலுக்கு எதிரான வாக்கெடுப்பில் இந்தியா பங்கேற்காதது தவறானது என சோனியா காந்தி கருத்து வெளியிட்டுள்ளார்.
அத்துடன், இஸ்ரேலுடன் சமாதானமாக இணைந்து பலஸ்தீன் செயல்பட வேண்டுமென்பது காங்கிரஸின் நிலைப்பாடு எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இறையாண்மை கொண்ட சுதந்திரமான, சாத்தியமான மற்றும் பாதுகாப்பான தேசம் உருவாக இரு நாடுகளுக்கிடையில் நேரடி பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட வேண்டும் என்பதில் காங்கிரஸ் உறுதியாக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், இஸ்ரேல் மற்றும் பலஸ்தீனுக்கிடையிலான போரை உடனடியாக நிறுத்த ஏனைய சர்வதேச நாடுகளும் முயற்சிக்க வேண்டுமென சோனியா காந்தி வலியுறுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |