1086 கோடிக்கு எம்பாப்பேவை ஒப்பந்தம் செய்ய திட்டமிட்டுள்ள பிரபல கிளப்!
PSG நட்சத்திரம் கைலியின் எம்பாப்பேவை 1,086 கோடிக்கு ஒப்பந்தம் செய்ய ரியல் மேட்ரிட் அணி திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கிளப்பை விட்டு சென்ற மெஸ்சி
பாரிஸ் செயிண்ட் ஜேர்மைன் கிளப்பின் தூண்களான மெஸ்ஸி, நெய்மர் வெவ்வேறு கிளப்களுக்கு சென்றுவிட்ட நிலையில், தற்போது மற்றொரு நட்சத்திரமான எம்பாப்பேவை ஒப்பந்தம் செய்ய பல அணிகளும் முயற்சித்து வருகின்றன.
இந்த நிலையில் Sports Bildயின் கூற்றுப்படி, ரியல் மேட்ரிட் அணி 120 மில்லியன் யூரோக்களுக்கு (1,086 கோடி) எம்பாப்பேயை ஏலத்தில் எடுக்க திட்டமிட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.
Reuters
எம்பாப்பேயின் விருப்பம்
எம்பாப்பே ரியல் மேட்ரிட் அணிக்கு மாறினால், ஸ்ட்ரைக்கராக வினிசியல் ஜூனியருடன் இணைந்து மிரட்டுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால், பாரிஸ் செயிண்ட் ஜேர்மைன் அணியில் நீடிப்பதே எம்பாப்பேயின் விரும்பம் என Le Parisien கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
Twitter/KMbappe
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |