புனித பயணத்தில் 45 இந்தியர்கள் மரணம்! ஒருவர் மட்டுமே உயிர்பிழைத்ததாக தகவல்
சவுதி அரேபியாவில் உயிரிழந்த 42 இந்தியர்களுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் இரங்கல் தெரிவித்துள்ளார்.
துயர சம்பவம்
மெக்கா மற்றும் மதீனாவிற்கு தெலங்கானாவைச் சேர்ந்த 46 பேர் கொண்ட குழு ஒன்று உம்ரா புனித பயணம் மேற்கொண்டது. 
பேருந்து மூலம் மதீனா சென்றபிறகு, மெக்காவுக்கு செல்லும்போது ஏற்பட்ட விபத்தில் 42 பேர் பலியானதாக செய்தி வெளியானது.
இதனையடுத்து இந்திய பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்து, "தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த குடும்பங்களுடன் எனது எண்ணங்கள் உள்ளன. காயமடைந்த அனைவரும் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்" என்றார்.
மேலும் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் மற்றும் மத்திய நாடாளுமன்ற விவகார அமைச்சர் கிரண் ரிஜிஜு ஆகியோரும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தங்கள் மனமார்ந்த இரங்கலைத் தெரிவித்தனர்.
ஒருவர் மட்டுமே
இந்த நிலையில், மெக்காவில் நடந்த விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 45 ஆக உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், 46 பேர் பயணித்த பேருந்தில் ஒருவர் மட்டுமே தப்பித்து சிகிச்சை பெற்று வருவதாகவும் அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இதற்கிடையில், பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில், இந்திய அரசு உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்கள், உடன் சென்ற அனைவரையும் மீட்டு இந்தியாவுக்கு பத்திரமாக கொண்டு வருவதுடன் நிவாரண உதவிகளை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். 
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |