அர்ஜுன் டெண்டுல்கருக்கு சானியாவுடன் திருமணம்: எப்போது தெரியுமா?
சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் மார்ச் மாதம் திருமணம் செய்துகொள்ள இருப்பதாக உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
அர்ஜுன் டெண்டுல்கர்
கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் மகனான அர்ஜுன் டெண்டுல்கர், தற்போது விஜய் ஹஸாரே தொடரில் கோவா அணிக்காக விளையாடி வருகிறார்.
Pic: X
இவருக்கும், சானியா சந்தோக் என்ற பெண்ணுக்கும் கடந்த ஆண்டு ஆகத்து மாதம் இரகசிய நிச்சயதார்த்தம் நடைபெற்றது.
பின்னர் சச்சின் டெண்டுல்கரும் மகனின் நிச்சயதார்த்தம் குறித்த தகவலை உறுதிப்படுத்தினார்.
திருமணம்
இந்த நிலையில், அர்ஜுன் டெண்டுல்கர் - சானியா சந்தோக் இருவருக்கும் மார்ச் மாதம் 5ஆம் திகதி திருமணம் நடைபெற உள்ளதாக செய்திகள் உறுதிப்படுத்துகின்றன.
இந்தத் திருமணம் மும்பையில் ஒரு நெருங்கிய குடும்ப விழாவாக நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதில் குடும்பத்தினர், நெருங்கிய நண்பர்கள் மற்றும் கிரிக்கெட் சமூகத்தைச் சேர்ந்த தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் அடங்கிய கவனமாகத் தயாரிக்கப்பட்ட விருந்தினர் பட்டியல் இடம்பெறும் என்று கூறப்படுகிறது.
Pic: Instagram
யார் இந்த சானியா?
சானியா சந்தோக் (Saaniya Chandhok) ஒரு வெற்றிகரமான தொழில்முனைவோர் மற்றும் ஒரு புகழ்பெற்ற குடும்பத்தைச் சேர்ந்தவர் ஆவார்.
இவர் மும்பையின் பிரபல தொழிலதிபர் ரவி கையின் பேத்தி ஆவார். சானியா, மும்பையில் உள்ள Mr.Paws Pet Spa $ Store LLPயில் நியமிக்கப்பட்ட பங்குதாரர் மற்றும் இயக்குநராக உள்ளார்.
பல ஆண்டுகளாக இவர், டெண்டுல்கர் குடும்பத்தின் நெருங்கிய வட்டாரத்தில் ஒரு பகுதியாக இருந்து வருவதாக கூறப்படுகிறது.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |