புடினுக்கு பின் ரஷ்யாவின் ஜனாதிபதி இவரா? வெளியான தகவல்
ரஷ்யாவில் விளாடிமிர் புடினுக்கு அடுத்து ஜனாதிபதியாக வரப்போவது யார் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
விளாடிமிர் புடின்
உலகின் மிகப்பெரிய சக்தி வாய்ந்த நாடாக இருப்பது ரஷ்யா. அமெரிக்கா, மேற்கத்திய நாடுகளுக்கு சிம்மசொப்பனமாக தற்போது ரஷ்யா இருப்பதற்கு காரணம் ஜனாதிபதி விளாடிமிர் புடின்தான்.
ரஷ்ய சட்டத்தின்படி ஒருவர் ஜனாதிபதியாக இருமுறை மட்டுமே ஆட்சி செய்ய முடியும். ஆனால், புடின் சட்டத்தில் திருத்தத்தைக் கொண்டுவந்து தொடர்ந்து ஜனாதிபதியாக இருந்து வருகிறார். விளாடிமிர் புடினுக்கு அடுத்து யார் ஜனாதிபதியாக வருவார் என்ற கேள்வி நிலவி வந்தது.
இந்நிலையில், ரஷ்ய அரசு தொலைக்காட்சியில் "ரஷ்யா, கிரெம்ளின், புடின், 25 ஆண்டுகள்" என்ற தலைப்பில் ஒளிபரப்பான நேர்காணலில் இதுகுறித்து புடினிடமே கேள்வி கேட்கப்பட்டது.
மக்களே தேர்ந்தெடுப்பார்கள்
அதாவது, உங்களுக்கு அடுத்ததாக இந்த நாட்டை ஆளப்போவது யார் என்பது குறித்து முடிவு செய்துவிட்டீர்களா என்ற கேள்விக்கு, 'என்னுடைய வெற்றியாளரை தேர்வு செய்யும் பணிகள் தொடங்கிவிட்டன' என அவர் பதிலளித்தார்.
மேலும் அவர், "மக்கள்தான் அவரை தெரிவு செய்யப்போகிறார்கள். இந்தப் போட்டியில் பலர் இருக்கின்றனர். அவர்களில் ஒருவரை மக்களே தேர்ந்தெடுப்பார்கள்" என்றார்.
ரஷ்யாவின் அரசியல் சாசனப்படி, ஜனாதிபதி பதவியில் இருப்பவரால் தன்னுடைய பொறுப்பை கவனிக்க முடியாத சூழல் ஏற்பட்டால், அந்த சமயத்தில் பிரதமராக இருக்கும் நபர் ஜனாதிபதி அதிகாரத்தை செயல்படுத்தும் நபராக இருப்பார்.
புடினுக்கு தற்போது 72 வயதாவதால், அவருக்கு நெருக்கமானவரும் நம்பிக்கையானவருமான பிரதமர் மிகைல் மிஷுஸ்டினுக்கு அவர் தன்னுடைய ஜனாதிபதி பதவியை விட்டு தரலாம் என்று தகவல்கள் கூறுகின்றன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |