தங்கச் சுரங்கத்தில் இருந்து மீட்கப்பட்ட 60 உடல்கள்: நூற்றுக்கணக்கானோர் சிக்கி தவிப்பு
தென்னாப்பிரிக்காவில் தங்கச் சுரங்கத்தில் இருந்து டஜன் கணக்கானோரின் உடல் மீட்கப்பட்டுள்ளது.
தங்கச் சுரங்கத்தில் பயங்கரம்
தென்னாப்பிரிக்காவில் கைவிடப்பட்ட ஒரு தங்கச் சுரங்கத்தில் நிகழ்ந்த மோசமான சம்பவத்தில் குறைந்தது 60 சுரங்கத் தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர்.
மேலும் சுரங்கத்தில் இருந்து 82 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.
இருப்பினும், மீட்கப்பட்டவர்கள் சட்டவிரோத சுரங்க தொழில் மற்றும் குடியேற்ற விதிமீறல் குற்றச்சாட்டுகளுக்காக விரைவில் கைது செய்யப்பட உள்ளனர்.
மீட்பு பணி தீவிரம்
சுரங்கத் தொழிலாளர்களின் உரிமைகள் குழுவின் கூற்றுப்படி, நூற்றுக்கணக்கானோர் இன்னும் ஆழமான நிலத்தடியில் சிக்கியிருக்கலாம்.
குழு வெளியிட்ட அதிர்ச்சியூட்டும் காட்சிகளில், சுரங்கத்திற்குள் உயிரற்ற உடல்கள் மற்றும் உடல் மெலிந்த தப்பியோடியவர்களை பார்க்க முடிகிறது.
திங்கள் கிழமை தொடங்கப்பட்ட மீட்பு நடவடிக்கையில், இரண்டு கிலோமீட்டருக்கும் அதிகமான ஆழத்திலிருந்து சுரங்கத் தொழிலாளர்களை வெளியேற்ற ஒரு கூண்டு போன்ற கட்டமைப்பு பயன்படுத்தப்பட்டது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |