தென்னாப்பிரிக்காவில் தொடர் வன்முறை: மருத்துவமனைக்கு தீ வைப்பு; 72 பேர் மரணம்
தென்னாப்பிரிக்காவில் முன்னாள் ஜனாதிபதி ஜேக்கப் ஜூமா சிறையில் அடைக்கப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து நடைபெற்று வரும் வன்முறைப் போராட்டங்களால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 72-ஆக உயர்ந்துள்ளது.
ஊழல் குற்றம்சாட்டப்பட்ட முன்னாள் அதிபர் ஜேக்கப் ஜூமா (Jacob Zuma), விசாரணைக்காக நீதிமன்றத்தில் ஆஜராகததால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவருக்கு 15 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
ஜேக்கப் ஜுமா வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து தென்னாப்பிரிக்கா முழுவதும் தொடர்ந்து கலவரம் வெடித்து வருகிறது. கலவரத்தில் இதுவரை 72 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
செவ்வாக்கிழமை இரவு, டர்பன் நகரில் Lenmed மருத்துவனை முற்றிலுமாக தீ வைக்கப்பட்டது.
குவாசுலு-நடால் மற்றும் குவாடெங் மாகாணங்களை மையமாகக் கொண்ட வன்முறை, கடைகள் சூறையாடப்பட்டு மக்கள் கொல்லப்பட்டனர்.
சொவேட்டோ நகரில் கடைகள் சூறையப்பட்டபோது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 10 பேர் உயிரிழந்தனர்.
Toddler rescued from a fire. Looters started a fire after stealing everything from the shops on the ground floor. They then set fire to the building, affecting apartments upstairs. Neighbours caught the little girl ?#ShutdownKZN watch @BBCWorld for more pic.twitter.com/LTMTAa7WAz
— Nomsa Maseko (@nomsa_maseko) July 13, 2021
டர்பன் நகரில் ஒரு கட்டடத்தின் மாடியில் இருந்து குழந்தை ஒன்று தரைத் தளத்துக்கு தூக்கி வீசப்படும் காட்சியை பதறவைக்கிறது .
நாட்டின் முக்கியப் பகுதிகளில் வன்முறையைக் கட்டுப்படுத்துவதற்காக ஆயிரக்கணக்கான ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.
LenMed Hospital and Heart Centre on fire ????#FreeJacobZumaNow#ShutdownSA pic.twitter.com/jomnptCnMd
— El Maestro (@KennethTVafana) July 14, 2021
வன்முறையைத் தூண்டியதாக 12 பேரை அடையாளம் கண்டிருப்பதாக தென்னாப்பிரிக்க காவல்துறை தெரிவித்துள்ளது. இதுவரை 1,234 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் காவல்துறையினர் கூறியுள்ளனர்.
1990-களுக்குப் பிறகு தென்னாப்பிரிக்காவில் நடக்கும் மிக மோசமான வன்முறை இதுவென அதிபர் சிரில் ராமஃபோஸா (Cyril Ramaphosa) கூறியுள்ளார்.
Some Indian and White property owners resorted to firing to protect their shops from looting as chaos and looting is happening in many major cities of South Africa. pic.twitter.com/2ZCC58yPgv
— Enemy Slayer (@EnemySlayer24_7) July 12, 2021