தென்னாப்பிரிக்காவில் என்ன நடக்கிறது? நிலைமையை விவரிக்கும் சில புகைப்படங்கள்!
கலவர பூமியாக மாறியுள்ள தென்னாபிரிக்காவின் தற்போதைய நிலைமையை எடுத்துரைக்கும் சில புகைப்படங்களை இங்கே பார்க்கலாம்.
தென்னாப்பிரிக்காவில் ஊழல் குற்றம்சாட்டப்பட்ட முன்னாள் அதிபர் ஜேக்கப் ஜூமா வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, நாடு முழுவதும் தொடர்ந்து கலவரம் வெடித்து வருகிறது. கலவரத்தில் இதுவரை 72 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
தென்னாபிரிக்கா முழுவதும் பல நகரங்களில், மருத்துவமனைகள் தீவைக்கப்பட்டு, கடைகள் சூறையாடப்பட்டு, மக்கள் கொள்ளப்பட்டு வருகின்றனர்.
நாட்டின் முக்கியப் பகுதிகளில் வன்முறையைக் கட்டுப்படுத்துவதற்காக ஆயிரக்கணக்கான ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.
1990-களுக்குப் பிறகு தென்னாப்பிரிக்காவில் நடக்கும் மிக மோசமான வன்முறை இதுவென அதிபர் சிரில் ராமஃபோஸா (Cyril Ramaphosa) கூறியுள்ளார்.











